மக்களே ரெடியா..? ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ விதிகளில் புதிய மாற்றங்கள்.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், பண பரிமாற்றங்களில் பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றில் அனுப்பும்/பெறும் தொகைக்கு புதிய வரம்புகள் வரலாம். இது குறிப்பாக UPI பயன்படுத்தும் பயனர்களை அதிகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இது பேங்குகள் மற்றும் பேமென்ட் செயலிகளுக்கு (PhonePe, Google Pay, Paytm) நேரடியாக பொருந்தும். தாமதம், தோல்விகள், நீண்ட நேரம் காத்திருத்தல் போன்ற பிரச்சனைகள் வந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஒரு நாளில் 50 முறை மட்டுமே அனுமதி : அந்த வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் உங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI செயலிகளில், ஒரே நாளில் 50 முறை வரை மட்டுமே கணக்கு இருப்பு (Account Balance) பார்வையிட முடியும். பல UPI Apps, தேவையற்ற முறையில் அடிக்கடி balance check request அனுப்புவதால், பின்னணி பரிமாற்ற முறையில் சுமை அதிகரிக்கிறது. இதனால், பண பரிமாற்றங்கள் தாமதமாகும்.

மக்களே ரெடியா..? ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ விதிகளில் புதிய மாற்றங்கள்.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!!

சில நேரங்களில் system error-களும் வரும். இந்த சிக்கல்களை தவிர்க்கத்தான் இந்த 50 முறை வரம்பு கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலான பயனர்கள் ஒரு நாளில் 5 முதல் 10 முறையே பேலன்ஸ் பார்க்கிறார்கள். 50 முறை என்பது அதிகமானதாகவே இருக்கிறது. எனவே பெரும்பாலானவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது.

மொபைல் எண் + வங்கிக் கணக்குகள் : அதேபோல், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், UPI பயன்பாட்டில் ஒரு புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இனி ஒரே நாளில் 25 முறை மட்டுமே, உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளைச் (linked accounts) சரிபார்க்க UPI செயலிகள் அனுமதிக்கப்படும். பல UPI செயலிகள், பின்னணி செயல்பாடுகளில் மீண்டும் மீண்டும் உங்கள் linked bank accounts-ஐ சரிபார்க்கும். இது சேவையை மெதுவாக்கும், backend-ல் அதிக சுமையை ஏற்படுத்தும். இதை தவிர்க்கும் வகையில், ஒரு நாளுக்கு 25 முறை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயனர்கள் இதை ஒரு நாளில் 1 அல்லது 2 முறை மட்டுமே செய்கிறார்கள். எனவே, பொதுவான பயனர்களுக்கு எந்த விளைவும் இருக்காது.

Auto-Debit பணப்பரிவர்த்தனைக்கு புதிய நேர வரம்புகள் : Auto-Debit என்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாக பணம் பிடிக்கப்படும் நடைமுறை ஆகும். அதாவது, Netflix, Disney+ Hotstar போன்ற ஓடிடி சந்தாக்கள், SIP முதலீடுகள் (மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்) EMI, காப்பீடு கட்டணம் போன்றவை தானாக செலுத்தக் கூடிய கட்டணங்கள் ஆகும். எனவே, இதில் தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் 5 மணி வரை, இரவு 9:30 மணிக்கு பிறகு ஆகிய நேரங்களில் மட்டுமே இனி பணம் பிடித்தம் செய்யப்படும்.

சில நேரங்களில், UPI சேவை மிகவும் பரபரப்பாக இருப்பது (peak hours) காரணமாக, Auto-debit செயலிகள் தாமதமாக பணத்தை பிடிக்கிறது. சிலசமயம் failure ஆகிறது. இதை சரிசெய்ய, National Payments Corporation of India (NPCI) இந்த நேர வரம்புகளை கொண்டு வந்துள்ளது. எனவே, உங்கள் அனுமதியுடன் செயல்படும் auto-payments இப்போது தவிர்க்க முடியாத நேர கட்டுப்பாட்டில் நடைபெறும். நீங்கள் பணம் செலுத்தவில்லை என்ற பதட்டம் கொள்ள வேண்டாம். அது அடுத்தடுத்த நேரங்களில் பிடித்தம் செய்யப்படும். உங்கள் வங்கி கணக்கில் போதுமான இருப்பு இருக்க வேண்டும், இல்லையெனில் பணம் எடுப்பது தோல்வியடையும்.

UPI பணப்பரிவர்த்தனையில் தாமதம்.. புதிய கட்டுப்பாடு: நீங்கள் UPI மூலம் பணம் அனுப்பும் போது, சில நேரங்களில் தாமதமாக இருக்கலாம். இந்நிலையில், நீங்கள் transaction நிலையை (status) மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இரண்டு status checks இடையில் குறைந்தது 90 விநாடிகள் இடைவெளி இருக்க வேண்டும். இது, UPI சேவையகங்களில் அதிகளவு கோரிக்கைகள் வரும் பொழுது, சர்வர் திணறல் ஏற்படுவதைத் தடுக்கும். இதனால் transaction retry மற்றும் refund செயல்பாடுகள் சீராக நடைபெறும். உங்கள் transaction வெற்றிகரமாக முடியும் வாய்ப்பு உள்ளது.

NPCI எடுத்த முக்கிய நடவடிக்கைகள் : கடந்த ஜூன் மாதம் NPCI யுபிஐ சேவையை வேகமாகவும், சிறந்த முறையிலும் செயல்படுவதற்கு சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி, பணம் அனுப்பும் நேரம் 15 விநாடிகளுக்கு குறைக்கப்பட்டது. தவறான பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் நேரம் 10 விநாடிகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பணம் அனுப்பும் செயல்முறை வேகமானது. தவறுகள் வந்தால் அதனைச் சரி செய்யும் நேரமும் குறைந்தது. இந்த முன்னேற்றங்களால், யுபிஐ பயன்படுத்தும் போது உங்கள் பண பரிவர்த்தனைகள் சீக்கிரம் முடியும் மற்றும் சேவை நம்பகமாக இருக்கும். அதிகபட்சமாக, ஆகஸ்ட் மாத புதிய விதிகள் இதனை மேலும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது.

ஜூன் 30ஆம் தேதி முதல், UPI செயலிகளில் பணம் அனுப்பும் போது, நீங்கள் பணம் அனுப்பவிருக்கும் வங்கி கணக்கின் பதிவு செய்யப்பட்ட உண்மையான பெயர் முன்னதாகவே தோன்றும். இதனால், தவறுதலாக அல்லது மோசடி செய்யும் கணக்குகளுக்கு பணம் செலுத்துவதை தடுக்கும். இதன் மூலம் UPI மோசடிகளை வெகுவாக குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+