ஆகஸ்ட் 9ஆம் தேதி வங்கிகள் விடுமுறை..! ஆகஸ்ட் மாதத்தில் ஏகப்பட்ட விடுமுறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கு கீழ் கொண்ட வர ரெப்போ விகிதத்தை அடுத்தடுத்து உயர்த்தி வரும் நிலையில் மக்கள் வங்கிகளில் தங்களது வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றவும், இதேபோல் தங்கக் கடன் அளவை குறைக்கவும், பர்சனல் லோன் முடிக்கவும் வங்கிகளுக்குச் சென்று வருகின்றனர்.

 

ஏற்கனவே பல வங்கிகள் வட்டியை உயத்தியுள்ள நிலையில் தற்போது 3வது முறை ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்திய பின்பு வங்கிகள் புதிய உயர்வை அறிவிக்கச் சரியான நேரத்தைப் பார்த்து வருகின்றனர். இதனால் வங்கிகளுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் வங்கிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த நாள் வங்கி விடுமுறை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை 4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

முஹர்ரம் பண்டிகை

முஹர்ரம் பண்டிகை

ஆகஸ்ட் 9, 2022 அன்று முஹர்ரம் காரணமாகச் சில மாநிலங்களில் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஆகஸ்ட் 8 தேதியே முஹர்ரம் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் சார்பாக அனைத்து இஸ்லாம் நண்பர்களும் முஹர்ரம் பண்டிகை வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 9-ம் தேதி எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஆகஸ்ட் 8,9

ஆகஸ்ட் 8,9

ஆகஸ்ட் 8, 2022 (திங்கட்கிழமை)- முஹர்ரம் (அஷூரா)- ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து
ஆகஸ்ட் 9, 2022 (செவ்வாய்)- முஹர்ரம் (அஷூரா)- திரிபுரா, குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஹைதராபாத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், வங்காளம், லக்னோ, புது டெல்லி, பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரக்ஷா பந்தன்
 

ரக்ஷா பந்தன்

இந்த வாரம் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ரக்ஷா பந்தன் விடுமுறை சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மாநிலத்தின் அடிப்படையில் மாறுபடும். ஆகஸ்ட் 11 ஆம் தேதி அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர், சிம்லா ஆகிய மாநிலங்களிலும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி கான்பூர், லக்னோ ஆகிய மாநிலங்களிலும் விடுமுறை

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்

தேசபக்தர்கள் தினத்தையொட்டி, மணிப்பூர், இம்பாலில் உள்ள வங்கிகள் ஆகஸ்ட் 13 அன்று மூடப்பட்டுள்ளன; இதைத் தொடர்ந்து இரண்டாவது சனி, ஞாயிறு மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினங்களில் வங்கிகள் இயங்காது. ஆகஸ்ட் 2022 இல், நாடு முழுவதும் உள்ள வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்கள் வரை மூடப்படுகிறது.

மற்ற விடுமுறை நாட்கள்

மற்ற விடுமுறை நாட்கள்

பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) - 16 தேதி
ஜென்மாஷ்டமி - 18 தேதி
ஜன்மாஷ்டமி (ஷ்ரவண வத்-8)/கிருஷ்ண ஜெயந்தி - 19 தேதி
ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி - 20 தேதி
ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி - 29 தேதி
விநாயகர் சதுர்த்தி - 31 தேதி

இந்த விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. ஆகஸ்ட் 15க்கு பின்பு 19ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி மற்றும் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய இரு நாட்களில் தமிழ்நாட்டில் வங்கிகள் விடுமுறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bank holiday
English summary

August 9 a bank holiday on Muharram; Check full August month bank holiday list here

August 9 a bank holiday on Muharram; Check full August month bank holiday list here ஆகஸ்ட் 9ஆம் தேதி வங்கிகள் விடுமுறை..! ஆகஸ்ட் மாதத்தில் ஏகப்பட்ட விடுமுறை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X