அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பு குறித்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவில் தீவிரமாக நடந்து வரும் காரணமாக ஆஸ்திரேலிய பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒத்திவைத்து உள்ளார்.
இதனால் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தக நகரமான சிட்னி-யில் நடக்க திட்டமிட்டு இருந்த குவாட் உச்சிமாநாடு நடைபெறாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

ஜோ பைடன் 2024 ஆம் ஆண்டு தேர்தல் எதிர்கொள்ள இருக்கும் வேளையிலும், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டிப்போட தயாராகியிருக்கும் வேளையிலும் ரெசிஷன், நிதி பற்றாக்குறை, வங்கி திவால் ஆகிய பிரச்சனைகளை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை சரி செய்வது தான் முதலும் முக்கியமான பணியாக ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாக குழு இலக்காக கொண்டு உள்ளது.
இந்த நிலையில் தான் சிட்னி-யில் நடக்க திட்டமிட்டு இருந்த குவாட் உச்சிமாநாட்டிற்கு வர முடியாது என தெரிவித்தது மட்டும் அல்லாமல் ஜோ பைடன் ஆசிய பயணத்தின் இரண்டாவது கட்டத்தை மொத்தமாக ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2வது கட்ட ஆசிய பணத்தில் ஜோ பைடன் பப்புவா நியூ கினியா செல்ல கூட திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் இந்த வார இறுதியில் ஜப்பான் நாட்டில் நடக்க இருக்கும் G7 மாநாட்டில் சந்திப்போம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
Quad கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளது. ஜப்பானில் நடக்கும் G7 கூட்டமைப்பில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா ஆகியவை நாடுகள் மட்டுமே உள்ளது, இதில் இந்தியா, ஆஸ்திரேலியா இல்லை.
இதேவேளையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சிட்னியில் இரு நாடுகள் மத்தியிலான இருதரப்புத் திட்டம் அடுத்த வாரம் தொடரும் என்று அல்பானீஸ் உறுதி அளித்தார்.
குவாட் என்பது ஒரு திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை ஊக்குவிக்கும் ஒரு முறைசாரா குழு. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ச்சி ஆதிக்கத்தை குறைக்க குவாட் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக சீனா தரப்பு நம்புகிறது.
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு பணக்கார நாடுகளின் G7 குழுவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இல்லை, ஆனால் QUAD கூட்டமைப்பில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஜப்பானில் நடக்கும் G7 கூட்டத்திற்கு பின்பு QUAD நாடுகளில் கூட்டம் நடக்கும், அல்லது சிறிய அளவிலான ஒரு நாள் அல்லது சில மணிநேர மட்டும் முக்கிய விஷயங்களை விவாதிக்கும் கூட்டமாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications