சர்வதேச அளவில் உள்ள நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இருக்கும் வேலை என்னவாகுமோ என்ற கவலையே ஊழியர்கள் மத்தியில் பெரும்பாலும் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் போனஸ், சம்பள உயர்வு என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருந்து வருகின்றது எனலாம்.
இப்படி இருக்கும் சவாலான காலகட்டத்திலும் ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கிறது எனில், அது உண்மையில் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் தானே.
ஆஸ்திரேலியா நிறுவனம்
அப்படி தான் ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளது. கிறிஸ்துமஸ்-க்காக போனஸ் ஆக 80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ராய் ஹில் என்ற நிறுவனத்தினை ஜினா ரைன்ஹார்ட் என்ற பெண் நடத்தி வருகின்றார்.
ரூ.80 லட்சம் போனஸ்
கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வரும் ராய் ஹில், கணிசமான லாபத்தினையும் கொடுத்து வந்துள்ளது. இதற்கிடையில் தன்னுடன் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் 80 லட்சம் ரூபாய் போனஸ் ஆக கொடுத்துள்ளார் ஜினா ரைன்ஹார்ட்.
ஊழியர்கள் செம ஹேப்பி
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டினை ஒட்டி இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்த 10 பேரில் ஒருவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நிறுவனத்தில் இணைந்துள்ளார் என்பது தான்.
இம்புட்டு லாபமா?
குறிப்பிட்ட 10 ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் வாரி வழங்கியுள்ளார் இந்த பெண் தொழிலதிபர். கடந்த ஆண்டில் ராய் ஹில் நிறுவனம் இந்த சவாலான காலகட்டத்திலும் 3.3 பில்லியன் டாலர் லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
டெக் ஜாம்பவான்கள்
உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆன ஆப்பிள்,மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர், சிஸ்கோ என பல நிறுவனங்களும், மந்த நிலையை காரணம் காட்டி பணி நீக்கம் செய்து வருகின்றன. செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.ஆனால் ராய் ஹில் டெக் ஜாம்பவான்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில், ஊழியர்களுக்கு போனஸினை வாரி வழங்கியுள்ளது. இது மற்ற நிறுவனங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சரியான பாடம்
சமீபத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்தினை குறைத்தாலும் பரவாயில்லை. ஆனால் வேலையினை விட்டு தூக்காமல் இருக்கலாம் என கருத்துகள் வெளியாகின. ஆக இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயம் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு சரியான பாடம் தான்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications