இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. 8 வருடம் விசா இல்லாமல் வேலை செய்யலாம்..!

ஆஸ்திரேலிய கல்லூரிகளில் சேரும் இந்தியப் பட்டதாரிகளுக்கான குடியேற்ற விதிமுறைகள் ஜூலை 1, 2023 முதல் மாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மத்தியிலான இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது நினைவிருக்கும். இதன் வாயிலாக விசா வழங்குவதில் இந்தியர்களுக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இப்புதிய விதிமுறைகளின் படி இந்திய மாணவர்கள் இப்போது எட்டு ஆண்டுகள் வரை விசா இல்லாமல் பணியாற்றும் சலுகையை பெற்ற முடியும். மே 2023 இல் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக என ப்ரீ பிரஸ் ஜர்னல் தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. 8 வருடம் விசா இல்லாமல் வேலை செய்யலாம்..!

மேட்ஸ் விசா கீழ் இந்திய பட்டதாரிகள் இந்த சலுகையை பெறலாம், ஒரு தற்காலிக விசா திட்டம் என்பதை மறந்துவீடாதீர்கள். Mobility Arrangement for Talented Early-Professionals Scheme (மேட்ஸ்) கீழ் இந்திய மாணவர்கள் இருதரப்பு ஒப்பந்தத்தின்படி எட்டு ஆண்டுகள் வரை விசா இல்லாமல் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய அரசு இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3000 இளம் தொழில் வல்லுநர்களை விசா இல்லாமல் அதிகபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு வேலை செய்ய அனுமதிக்கும். கூடுதலாக, இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் விசா ஸ்பான்சர் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

பொறியியல், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுரங்கம், நிதி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் இந்திய வல்லுநர்கள் MATES தற்காலிக விசா திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வெளிநாட்டினருக்கான விசா விதிமுறைகளை எளிதாக்கி வரும் வேளையில் ஆஸ்திரேலியாவும் இந்தியர்களுக்கு கைகொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+