ஆஸ்திரேலியா வரை தாக்கத்தினை ஏற்படுத்திய ஹிண்டர்ன்பர்க் அறிக்கை.. அதானி முதலீட்டாளர்கள் அச்சம்!

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது ஜனவரி 24 அன்று வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானி குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டது. இது பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியது எனலாம்.

இது ஒரு புறம் எனில் அதானி குழுமத்தின் சரிவால், ஆஸ்திரேலியாவின் ஓய்வுகால சேமிப்புகளிலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதானி குழுமத்திற்கும், ஆஸ்திரேலியா ஓய்வூதிய சேமிப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுந்துள்ளதா?

ஆஸ்திரேலிய பண்டுகள் முதலீடு

ஆஸ்திரேலிய பண்டுகள் முதலீடு

அதானி குழுமத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆஸ்திரேலியாவின் பல ஓய்வூதிய பண்டுகள் முதலீடு செய்துள்ளனவாம். ஆக அதானி குழுமத்தின் சரிவானது ஆஸ்திரேலியா வரையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இதில் குயின்ஸ்லாந்தில் உள்ள அரசு ஊழியர்கள் முதல் தொடங்கி காமன்வெல்த் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வரையில் அடங்கும் என தெரிகிறது.

அதானி குழும பங்குகள் சரிவு

அதானி குழும பங்குகள் சரிவு

அதானி குழும பங்குகள் தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு மத்தியில், தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது 134 பில்லியன் டாலருக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.

அதானி குழுமங்களின் சந்தை மதிப்பு

அதானி குழுமங்களின் சந்தை மதிப்பு

இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 100 பில்லியன் டாலர்களுக்கும் கீழாக சரிவினைக் கண்டுள்ளது. ஜனவரி 24-க்கு பிறகு அதானி குழும பங்குகளின் மதிப்பானது 60% சரிவினைக் கண்டுள்ளது. வருவாயை அதிகரிக்க வளர்ந்து வரும் சந்தைகளுக்கு மத்தியில், அதானி குழும நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடுகளை தீவிரமாக அதிகரித்து வந்தது.

இரண்டு ஆஸ்திரேலியா பண்டுகள்

இரண்டு ஆஸ்திரேலியா பண்டுகள்

ஆஸ்திரேலியாவின் 243 பில்லியன் ப்யூச்சர் பண்ட், காமன்வெல்த்தின் நீண்டகால நிதி நிலுவையை வலுப்படுத்த அமைக்கப்பட்டது. இதேபோல பிரிஸ்பேனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆஸ்திரேலியா ஓய்வூதிய அமைப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளுடன் உள்ளது. இந்த பண்டுகள் அதானி குழுமத்தின் மீதான அறிக்கையானது வெளியாவதற்கு முன்பு, ஆறு அதானி நிறுவனங்களில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது.

முதலீடுகளின் நிலை என்ன?

முதலீடுகளின் நிலை என்ன?

ஆஸ்திரேலியாவினை போலவே நார்வேயின் மிகப்பெரிய பென்சன் பண்ட் நிறுவனமான கேஎல்பியும் முதலீடு செய்திருந்தது. இது அதானி குழும பங்குகளின் சரிவின் காரணமாக பெரும் பகுதி ஹோல்டிங்கினை விற்பனை செய்தது. இது மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான வெளி நாட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிலையில், அவற்றின் நிலை என்ன? என்பது குறித்தான பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.

இதுவும் கவனிக்க வேண்டியது தான்?

இதுவும் கவனிக்க வேண்டியது தான்?

சமீபத்திய அறிக்கை ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ESG இலக்குகளை ஊக்குவிக்கும் நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதானி பங்குகளை முதலீடு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மொத்தத்தில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குகளை விற்றாலோ, அல்லது மறுசீரமைப்பு செய்தாலோ, அதானி குழுமத்தின் நிலைமை இனி என்னவாகுமோ?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+