பொதுவாக இதுபோன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவதுண்டு. மனதை நெருடும் இதுபோன்ற சம்பவங்கள் அரக்கர்கள் இன்னும் பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்களா? என்று எண்ணவும் தோன்றுகிறது.
இந்த சம்பவம் நடந்தது ஜெட்ஸ்டார் (Jet Star) விமானத்தில் தான்.
வீல் சேருக்கு கட்டணம்
ஜெட் ஸ்டார் விமானத்தில் பயணம் செய்த ஒரு மாற்று திறனாளி பெண்ணுக்கு, விமானத்தில் இருந்து இறங்க சக்கர நாற்காலி சேவைக்கு பணம் செலுத்த கூறியதாக தெரிகிறது. ஆனால் தன்னால் கட்டணம் செலுத்த முடியாது என்ற கூறிய அந்த பெண், ஜெட் ஸ்டார் விமானத்தில் தவழ்ந்து செல்வதையும் வீடியோ மூலம் பார்க்க முடிகிறது.
ஏன் தவழ்ந்து சென்றார்?
இது குறித்து அந்த பெண் தன்னிடம் விமான நிறுவனம் சக்கர நாற்காலிக்கு கட்டணம் செலுத்த கூறியதாகவும், அதனால் தான் விமானத்தில் இருந்து தவழ்ந்து சென்றதாகவும் கூறியுள்ளார். எனினும் இதனை மறுத்துள்ள விமான நிறுவனம் நிர்வாகம் இதுபோல் தாங்கள் என்றும் செய்ததில்லை. தகவல் தொடர்பு பிரச்சனை காரணமாக இப்பிரச்சனை நிகழ்ந்துள்ளது. அவர் பணம் செலுத்தும் வரையில் சேவை மறுக்கப்படவில்லை என்று மறுத்துள்ளது.
இறங்கும் போது கட்டணமா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் சிங்கப்பூரில் தான் ஏறுவதற்கு இலவசமாக சக்கர நாற்காலி வழங்கப்பட்டதாகவும், ஆனால் தாய்லாந்திற்கு வந்தவுடன் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு மற்றொரு நாற்காலியை பயன்படுத்த பணம் செலுத்த கூறியதாகவும் நடாலி கூறுகிறார். இது அநியாயம். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விமானத்தில் இருந்து இறங்குவதற்கு நான் பணம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு இப்படி இல்லை
ஆக அந்த சமயத்தில் தனக்கு வேறு ஆப்சன் இல்லாததால் தான், தவழ்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார். இதற்கு முன்பாக அவர் பயணம் செய்த போது அவரிடம் இப்படி பணம் ஏதும் வசூலித்தது இல்லை என்றும் நடாலி கூறியுள்ளார்.
தோழியின் கருத்து?
இதனை படம்பிடித்த நடாலியின் தோழி நடாஷா எல்போர்ட், ஊழியர்கள் நடாலியாவுக்கு உதவ முன் வந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் நடாலியாவுக்கு முழங்காலில் காயம் இருந்ததால், அவரால் விமானத்தில் இருந்து இறங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மொழி தான் பிரச்சனையா?
விமான ஊழியர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்திருக்கலாம். இப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியவில்லை. விமானம் வந்தடைந்த பிறகு 40 நிமிடங்களுக்கு அவருக்கு இடைகழி சக்கர நாற்காலி கிடைக்கவில்லை என்று வெளிப்படையாக ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அவமானம்
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்தை சேர்ந்தவர் தான் குமாரி நடாலி கர்டிஸ். இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில், இதுபோன்ற அவமானத்தை தான் ஒரு போதும் சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
ஜெட் ஸ்டார் விமானத்தில் கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து பாங்காங் சென்ற நட்டாலி, அந்த சமயத்தில் தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டுள்ளன.
நட்டாலியிடம் விசாரணை
ஆரம்பத்தில் இத்தகைய செயலை நாங்கள் செய்யவில்லை என்று கூறிய விமான நிறுவனம், பிறகு நடாலியிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. மேலும் இது குறித்து நடாலியிடமும் CNA விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணத்தை திரும்ப கொடுத்த நிறுவனம்
இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுடன் எங்கள் விமானத்தில் நடாலியாவுக்கு நேர்ந்த அனுபவத்திற்கு, நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தினை வழங்க கடமை பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
நடாலியாவுக்கு விமான நிறுவனம் முழு பணத்தினையும் மற்றும் இழப்பீட்டினையும் வழங்கியுள்ளது. எனினும் இனி ஜெட் ஸ்டாரில் ஒரு போதும் பயணம் செய்ய மாட்டேன் என நடாலி தெரிவித்துள்ளார்.
வேதனையளிக்கும் சம்பவம்
விமானத்தில் பயணம் செய்வதை விட, அங்கு செய்யப்படும் பரிசோதனை என்னடா இது என்று சலிப்பூட்டும். சாதாரண மனிதர்களுக்கே இப்படி எனில், மாற்று திறனாளிகளுக்கு இது இன்னும் எரிச்சலூட்டுவதாக இருக்கும். அத்தகைய சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் மிக வேதனையளிக்கும் ஒரு செயலாக உள்ளன. அதிலும் பணத்திற்காக இத்தகைய சேவைகள் மறுக்கப்படுவது மிகவும் மோசமான செயலாகவும் பார்க்கப்பகிடுறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications