சீனா வேண்டாம் என எங்களால் தவிர்க்க முடியாது.. ஆட்டோமொபைல் மற்றும் பார்மா துறை.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஜூன் 15ம் தேதி இரவு இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

சீனாவில் என்ன பாதிப்பு என்பது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் அந்த பிரச்சனையில் சீன ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை போலி செய்தி என சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் லிஜியன், கடந்த ஜூன் 23-ம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதை போலிச் செய்தி எனவும் தெரிவித்ததாக சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான சிஜிடிஎன் தெரிவித்திருந்தது.

சீன பொருட்கள் வேண்டாம்

சீன பொருட்கள் வேண்டாம்

இதற்கிடையில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானதாக வெளியான செய்தியினை அடுத்து சீனா வேண்டாம், சீன பொருட்கள் வேண்டாம், boycott china, boycott china goods, #boycott china, #BoycottcChineseProducts, boycottcChinesegoods என்று பரவலாக சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் இவ்வாறு சீனாவை வேண்டாம் என ஒதுக்கி விட முடியுமா? சீனா பொருட்களை தவிர்க்கத் தான் முடியுமா? என்றால் நிச்சயம் தற்போதைக்கு முடியாது என்பதே ஒரு பதில்.

மருந்து மூலதன பொருட்கள்

மருந்து மூலதன பொருட்கள்

ஏனெனில் இந்தியா மருந்து ஏற்றுமதி உலகளவில் மூன்றாவது நாடாக இருந்தாலும், பெரும்பாலான மருத்துகளுக்கு மூலதன பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆக சீனா இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியா இல்லாமல் சீனா இருக்க முடியும். ஏனெனில் சீனாவின் பரவலான சந்தையில் இந்தியாவின் பங்கு குறைவு தான். ஆக உண்மையில் சீனாவினை ஒதுக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

சீனாவை விட மலிவாக கிடைக்காது

சீனாவை விட மலிவாக கிடைக்காது

ஏனெனில் பல நாடுகளைப் போலவே இந்தியாவும் மின்னணு பாகங்கள் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற தயாரிப்புகளுக்கு சீனாவையே நம்பியுள்ளது. ஏனெனில் அவற்றை தயாரிக்கவோ அல்லது அதனை விட மலிவாகவே வேறு எங்கும் வாங்க முடியாது என்றும் இத்துறை சார்ந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் வணிகங்களைத் தான் பாதிக்கும்

உள்ளூர் வணிகங்களைத் தான் பாதிக்கும்

இதனால் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவற்காக எந்தவொரு நகர்வுகளும் அல்லது மாற்று வழிகளை உருவாக்காமல் அவற்றை விலை உயர்ந்ததாக மாற்றுவதும், உள்ளூர் வணிகங்களைத் தான் பாதிக்கும். நாங்கள் இறக்குமதி செய்யவில்லை. நாங்களும் அதனைத் தான் விரும்புகிறோம், ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று மாருதி சுசூகியின் தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது கடினம்

கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது கடினம்

1,173 அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் இப்போது நிறுவனங்களுடன் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக பிசினஸ் டுடே செய்திகள் கூறுகின்றது. குறிப்பாக இதில் பொம்மை, பிளாஸ்டிக் மற்றும் எஃகு பொருட்கள், எலக்ட் ரானிக்ஸ் மற்றும் குறிப்பிட்ட வாகன உதிரி பாகங்கள் இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனா தான் காரணம்

சீனா தான் காரணம்

ஆக இவ்வாறு சீனாவினை தவிர்க்க நினைத்தல் அது இந்தியாவுக்கு தான் நஷ்டமாகும் என்றும் முதல் 10 மருந்து தயாரிப்பாளர்களில், ஒரு கார்ப்பரேட் மூலோபாயத்தின் தலைவர் கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் இந்தியா வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியானது 4.2 பில்லியன் டாலர் மதிப்பாகும். இதில் வாகன இயந்திரம் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள், உட்பட பல இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கொரோனாவின் மத்தியிலும் நாம் மருத்துகளை மலிவான விலையில் ஏற்றுமதி செய்து வருகிறோம் எனில் அதற்கு முக்கிய காரணிகளில் சீனாவும் ஒன்று.

மருந்து பொருட்கள் விலை அதிகரிக்க கூடும்

மருந்து பொருட்கள் விலை அதிகரிக்க கூடும்

அதிலும் இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களான சன் பார்மா, லூபின், ஐபிசிஏ உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவினையே நம்பியுள்ளன. ஆக நாம் சீனாவினை வேண்டாம் என தவிர்த்தால் மருந்துகளின் விலை அதிகரிக்க கூடும். அதிலும் முக்கிய ஆண்டிபயோடிக் மருந்துகளின் விலைக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Auto and pharma sectors not ready to avoid china

Indian automobile and pharma sectors not ready to boycott china, they said thSats not easy to done.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X