ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அவசர பயணத்திற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸியை பயன்படுத்தி வரும் நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக உயராத நிலையில் திடீரென ஆட்டோ, டாக்ஸி கட்டணம் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ, டாக்ஸி கட்டணம்
டெல்லி போன்ற பெருநகரங்களில் பேருந்து மற்றும் ரயில் பயணம் செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பெரிதும் நம்பியிருப்பது ஆட்டோ மற்றும் டாக்ஸி மட்டுமே. ஆட்டோ மற்றும் டாக்ஸியில் இதுவரை நியாயமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர மக்களுக்கு பேரிடியாக உள்ளது.
டெல்லி அரசு
டெல்லி அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் கிலோமீட்டருக்கு 5 ரூபாய் உயர்வு மற்றும் ஏசி மற்றும் ஏசி அல்லாத டாக்ஸி கட்டணம் ரூபாய் 4 மற்றும் ரூபாய் 3 என உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பணக்காரர்களை பெரிய அளவில் பாதிக்காது என்றாலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம்
இந்த கட்டண உயர்வுக்கு பின் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயரவுள்ளது. அதன்பின் மீட்டருக்கு ஒரு கிலோமீட்டர் கட்டணம் ரூ.9.50ல் இருந்து ரூ.11 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டாக்ஸி கட்டணம்
டாக்ஸிகளை பொருத்தவரை ஏசி அல்லாத வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.14ல் இருந்து ரூ.17 ஆகவும், ஏசி வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.16ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
2 வருடங்களுக்கு பின் உயர்வு
கடந்த 2020ஆம் ஆண்டு ஆட்டோவுக்கான அடிப்படை கட்டணம் திருத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கருப்பு மற்றும் மஞ்சள் டாக்சி, எகானமி டாக்ஸி மற்றும் பிரீமியம் டாக்சி ஆகியவற்றுக்கான கட்டணம் 9 ஆண்டுகளுக்கு பின் திருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications