சில சமயங்களில் பயணங்கள் நமக்கு மிகப்பெரிய வாழ்க்கை அனுபவங்களை கற்றுத் தந்துவிடும். அப்படி பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய ஒரு ஆட்டோ பயணம் வாழ்க்கை பற்றிய தன்னுடைய புரிதலையே மாற்றி அமைத்திருப்பதாக பதிவு வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். அவர் யார் அந்த ஆட்டோ பயணத்தில் என்ன நடந்தது என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
பெங்களூருவில் பொறியாளராக வேலை செய்பவர் ஆகாஷ் அனந்தானி. இவர் வழக்கம் போல ஆட்டோ புக் செய்து பயணம் செய்திருக்கிறார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஆப்பிள் வாட்ச் , ஏர் பாட் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளார். ஆட்டோ ஓட்டுகிறீர்கள் ஆனால் உங்களிடம் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட் போன்ற விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் இருக்கிறதே என ஆச்சரியப்பட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்க தொடங்கி இருக்கிறார்.

அப்போதுதான் அவருக்கு உண்மை தெரிய வந்திருக்கிறது. அதாவது இந்த ஆட்டோ ஓட்டுனர் சொந்தமாக இரண்டு வீடு வைத்திருக்கிறாராம். அவற்றின் மதிப்பு நான்கிலிருந்து ஐந்து கோடி ரூபாய் இருக்கும், வாடகை வருமானமாக மட்டும் அவருக்கு மாதந்தோறும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வருகிறது எனக் கூறியிருக்கிறார் . அது மட்டுமல்ல அவர் ஒரு ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு கூட செய்து இருக்கிறார்.
இதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஆகாஷ் வெளியிடவே சில மணி நேரங்களிலேயே நெட்டிசன்களின் குறிப்பாக பெங்களூரு வாசிகளின் பரவலான கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அவரிடம் நான் பேச்சு கொடுத்த போது வார இறுதி நாட்களில் நான் ஆட்டோ ஓட்டுவேன், இதுதான் என்னுடைய முதல் வேலை என்பதால் நான் இதை கைவிடமாட்டேன் என அந்த ஆட்டோ ஓட்டுனர் பதிலளித்தாராம்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. ஒரு நபர் இதனால் தான் பெங்களூருவை ஸ்டார்ட் அப் கேபிடல் என அழைக்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கூட இங்கே முதலீட்டாளர்கள்தான் எனக் கூறியிருக்கிறார் . ஒரு சிலர் இது உண்மைதானா என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர் அதற்கு பதில் அளித்திருக்கும் ஆகாஷ் இது உண்மை தான் என கூறியுள்ளார்.
ஒரு நபர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனர்களை தொடக்க நிலையிலே சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கும். அதனால் தான் முதலீடு செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். ஒரு சில பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் சொந்தமாக வீடு வைத்திருந்தால் அவற்றை வாடகைக்கு விட்டேன் நம்மால் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை சம்பாதித்து விட முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர்.
இரண்டு படுக்கை அறை வீடு என்றால் கூட பெங்களூரு நகரில் அதற்கு குறைந்தபட்சம் 30000 ரூபாய் வாடகை வசூல் செய்யப்படுகிறது . இதுவே பிரதான பகுதி என்றால் 70 ஆயிரம் ரூபாய் வரை கூட வாடகை செல்கிறது .


Click it and Unblock the Notifications