ஆட்டோ ஓட்டுநரான சத்யா சங்கர் ஜூலை 1964-ல் கர்நாடக மாநிலம், பெல்லாரே என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, குடும்பச் சுமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மேலான கல்வியை விட்டுவிட்டு வேலைக்குப் போனார். 18 வயதில் அரசு உதவி திட்டத்தின் கீழ் ஒரு ஆட்டோவைக் கடனில் வாங்கி ஓட்டத் துவங்கினார். ஒரு வருடத்துக்குள் அந்த கடனை அடைத்தபிறகு, சுற்றுலாப் பயணிகளுக்காக அம்பாசிடர் கார் வாங்கி சேவையளிக்கத் தொடங்கினார். ஆனால் கார் ஓட்டுவதால் குடும்பத்தை முன்னேற்ற முடியாது என்பதை உணர்ந்து பல்வேறு தொழில்களை செய்ய தொடங்கினார்.
1987-ஆம் ஆண்டு, சத்யா ஒரு ஆட்டோ உதிரிப்பாகங்கள் வணிகத்தைக் தொடங்கினார். பின்னர், 1989-ல் டயர் கடை ஒன்றையும் துவங்கினார். வணிகத்தில் சிறந்த திட்டமிடல் திறமை கொண்ட இவருக்கு நிதி மேலாண்மை என்றதும் ஆர்வம் ஏற்பட்டது. 1994-ல் பிரவீன் காபிடல் ப்ரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை துவங்கி, பழைய வாகனங்களுக்கு கடன் வழங்கத் தொடங்கினார். இந்நிறுவனம் தற்போது சத்யாவின் குழுமத்தில் ஆண்டுக்கு ரூ.240 கோடி வருமானம் அளிக்கிறது.

இதையடுத்து, 2001-ல் சத்யா, 35 லட்சம் முதலீட்டில் SG காம்பரேட்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கினார். முதல் சில ஆண்டுகளில் துன்பங்களை சந்தித்தாலும், 2006-க்குள் நிறுவனம் ரூ.6 கோடி வருமானம் ஈட்டியது. 2010-க்குள் ரூ.100 கோடியைத் தாண்டியது. இன்று SG குழுமம் பல்வேறு துறைகளில் செயல்படுகிறது. இதில் பிரவீன் காபிடல், மேகா ஃப்ரூட் புராசஸிங் போன்ற நிறுவனங்கள் அடங்கும். மேகா ஃப்ரூட் நிறுவனம் மட்டும் 55 வகையான பழவகை பானங்களை உற்பத்தி செய்கிறது.
இந்நிலையில், 2000-ஆம் ஆண்டு சத்யா, மினரல் வாட்டர் வணிகத்திற்குள் நுழைந்தார். 2002-ல் வடஇந்தியாவில் பயணித்தபோது, ஒரு கடையில் ஜீரா, உப்பு கலந்து சோடாவை விற்கும் தனித்துவமான முறையை பார்த்தார். அதுவே இவருக்குப் புதிய கருத்தைத் தந்தது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா என்ற பானத்தை உருவாக்கினார். ஆரம்பத்தில் அதிக பேர் ஏற்கவில்லை. ஆனால், சத்யா இலவச மாதிரிகளை வழங்கி, மக்கள் மனதில் அந்த சுவையை பதியச் செய்தார். தற்போது இந்த பானம் பல மாநிலங்களில் பிரபலமானது.
மேலும், 1992-ல் சத்யா ரஞ்சிதா சங்கரை மணந்தார். அவர் தற்போது ஹவுஸ் ஆஃப் பிந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது குழுமம் ஆண்டுக்கு ரூ.800 கோடி வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், சத்யா ரூ.11 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் VIII கார் வைத்திருக்கிறார். இது இவரது வெற்றியின் ஒரு சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், தொழில் துறையில் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டுவது மிகவும் அபூர்வமான விஷயம். சத்யா சங்கரின் வாழ்க்கை, நாம் என்ன தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல, அதை எவ்வாறு செய்கிறோம் என்பதே முக்கியம் என்பதற்கான உண்மையான எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இவரது முயற்சி, திட்டமிடல் மற்றும் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் திறமைதான் இன்று இவரை ஒரு பெரிய தொழில் அதிபராக மாற்றியுள்ளது. சிறிய முதலீட்டில் தொடங்கி பெரிய இலக்கை அடைய முடியும் என்பதை சத்யா சங்கரின் வாழ்க்கை நிரூபிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications