இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு சர்வதேச வாகன நிறுவனங்களும் தங்களது உற்பத்தியினை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக மின்சார வாகன நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
தென் கொரியாவை சேர்ந்த நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஏற்கனவே இந்தியாவில் தனது வணிகத்தினை செய்து வருகின்றது.
தற்போது மேற்கொண்டு தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக, மேற்கோண்டு 2,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மின்சார வாகன உற்பத்திக்கு திட்டம்
குறிப்பாக மின்சார வாகன பிரிவினை விரிவாக்கம் செய்யும் விதமாகவும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த நடவடிக்கையினை திட்டமிட்டுள்ளது. இது 2025ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மின்சார வாகனத்தினை தொடங்க உதவும் என்றும் இந்திய ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும்
இந்தியாவும் தொடர்ந்து மின்சார வாகனத்தினை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எங்களது விரிவாக்கம் எங்களை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
கொரோனாவுக்கு பிறகு நடத்தப்படும் இந்திய ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியானது, கிரேட்டர் நொய்டாவில் தொடங்கியுள்ளது. இந்த 45 வாகன உற்பத்தியாளர்கள் உட்பட 70 கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட கியா இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி தங்களது எதிர்கால திட்டம் குறித்தும் கூறியுள்ளார்.
அரிய வாய்ப்பு
இந்த கண்காட்சியானது வாகன பிரியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றே கூறலாம். இதில் பல வாகன நிறுவனங்களும் தங்களது புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் கியா இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது இருப்பினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யும் விதமாக, மிகப்பெரிய முதலீட்டு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
கியா மோட்டார்ஸின் திட்டம்
மேலும் 2027-க்குள் நாங்கள் 14 BEV மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அவற்றில் பெரும்பாலானவற்றை இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதில் இந்திய சந்தையில் தயாரிக்கப்பட்ட பேட்டரி மின்சார வாகனங்கள் அடங்கும் என இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டே ஜின் பார்க் தெரிவித்துள்ளார்.
விரிவாக்க திட்டம்
மேற்கொண்டு கியா இந்தியா நிறுவனம் தனது இருப்பினை 2023ல் 220 நகரங்களில் விரிவுபடுத்தவும், 2024-க்குள் 100-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை அடையவும் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தன்னை ஒரு பிரீமிய பிராண்டாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள கியா, கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக முதல் மூன்று நாடுகளில் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது தான் எதிர்காலம்
KA4 ரக மாடலை அறிமுக்கப்படுத்தப்பட்டதன் மூலம் நிறுவனம் MPV பிரிவில் த்னது இருப்பினை வலுவாக்க முயன்று வருகின்றது. இதற்கிடையில் மின்சார வாகனங்கள் தான் எதிர்காலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் ICE தொழில் நுட்பமும் உருவாகி வருகின்றது. இரண்டு தொழில் நுட்பங்களும் இணைந்தும் இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
ev9
இதற்கு மத்தியில் கியா நிறுவனம் அதன் EV9 மின்சார காரை இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் 2023 காட்சிபடுத்தியிருந்தது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தியுள்ள இந்த வாகனத்தில் சோலார் பேனம் அம்சம் உள்பட பல முக்கிய அம்சங்கள் உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications