சென்னை: 2024 ஆம் நிதியாண்டில் Passenger Vehicle (PV) என்று சொல்லப்படுகிற நான்கு சக்கர பயணிகள் வாகன தயாரிப்பாளர்கள் சுமார் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மணி கண்ட்ரோல் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் பல தொழில் வல்லுனர்களின் கருத்துப்படி, மார்ச் 31ஆம் தேதி நிறைவடைந்த 2023ஆம் நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 42.3 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் வரும் ஆண்டுகளில் இந்த நிலையான வளர்ச்சி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை மற்றும் பிற இடங்களில் புதிய தயாரிப்புகள், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு சுமார் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.

மாருதி சுசூகி (Maruti Suzuki), ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra and Mahindra), ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW-MG Motor India) போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீடுகளில் கணிசமான பகுதியானது ICEV திறன்களை அதிகரிக்க ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மின்சார வாகனங்களுக்கான (EV கள்)தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக கணிசமான தொகை முதலீடு செய்யப்பட உள்ளது.
மாருதி சுசூகி: முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, தனது 50 சதவீத சந்தைப் பங்கை மீட்டெடுக்கும் நோக்கில், நடப்பு நிதியாண்டில், புதிய தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் திறன் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்: 2023-2024ஆம் நிதியாண்டில் அதிக விற்பனையை செய்துள்ளது. தற்பொழுது ரூ. 13,180 கோடி ரூபாய் செலவழித்து, அதன் தயாரிப்புகளின் உற்பத்தித் திறனை விரிவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. மகாராஷ்டிராவின் தலேகான் ஆலையில் உற்பத்திப் பாதைகளை மாற்றியமைப்பதற்கு ரூ. 6,000 முதல் ரூ. 7,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் MD மற்றும் CEO, Unsoo Kim, இந்த சமீபத்திய முதலீடுகள், திறன் விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் மற்றும் பேட்டரி ஆலை ஆகியவற்றிற்காக முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ. 20,000 கோடி முதலீட்டிற்கு கூடுதலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (M&M): மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2025-2027ஆம் நிதியாண்டில் தயாரிப்பு மேம்பாடு, திறன் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.27,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது .
டாடா மோட்டார்ஸ்: மற்றொரு உள்நாட்டு வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் 2024-25ல் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக ரூ. 43,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார்: செப்டம்பர் முதல் ஒவ்வொரு 3 முதல் 6 மாதங்களுக்கும் ஒரு புதிய காரை உற்பத்தி செய்து அதன் திறனை அதிகரிக்கவும் சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியாவில் ரூ.5,300 கோடி முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து ஓராண்டுக்குப் பிறகு, நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் ரெனால்ட் SA ஆகியவை தங்களது எதிர்கால திட்டங்களைப் பற்றி கூறியுள்ளது. நான்கு புதிய ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்கள் (SUV-கள்) 2025ஆம் ஆண்டு முதல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டின் பலன்கள்:
நிறுவன வளர்ச்சி: இந்த பெரிய முதலீடு புதிய கார் மாடல்கள், உற்பத்தி விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு செலவிடப்படும். இதன் விளைவாக, கார் நிறுவனங்களின் விற்பனை மற்றும் லாபம் அதிகரிக்கும்.
பங்கு மதிப்பு உயர்வு: நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதால், பங்குச்சந்தையில் அவற்றின் பங்குகளின் மதிப்பு உயரும். இதனால், பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் லாபம் அடையலாம்.
புதிய வாய்ப்புகள்: மின்சார வாகனங்கள் (EV கள்) மீதான கவனம் அதிகரிப்பதால், இந்தத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பங்குகள் சிறந்த லாபத்தைக் கொடுக்கக்கூடும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications