சென்னை: நீண்ட நாட்களாக கார் வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுதான் சரியான தருணம். ஏனெனில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டு காலத்திற்கு பிறகு பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.
ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர் அசோசியேஷன் (Federation of Automobile Dealers Associations (FADA) ) வெளியிட்டுள்ள தகவலின்படி தற்போது பழைய ஹேட்ச்பேக் ரக Swift கார்களுக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறதாம். அதே போல Honda City கார்களுக்கு 50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இது நேரடியாக கட்டணத்தில் தள்ளுபடி மற்றும் ராயல்டி போனஸ் மற்றும் பழைய கார் பரிமாற்றங்களில் தள்ளுபடி என பல வகைகளில் வழங்கப்படுவதாக FADA தெரிவித்துள்ளது.

மாருதி சுசுகி Alto K10 காரில் பெட்ரோல் வேரியண்டுக்கு 42,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல மாருதி சுசுகி WagonR கார்களுக்கு 25,000 முதல் 30,000 ரூபாய் வரையிலும், ஹூண்டாய் Grand i10 கார்களுக்கு 18,000 முதல் 35,000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைப்பதாக தெரிகிறது. ஹூண்டாய் Aura கார்களுக்கு 23,000 முதல் 40,000 வரையிலான பலன்களும், ஹோண்டா Amazeஇல் 40,000 ரூபாய் வரை பணப் பலன்களும் கிடைக்கின்றன.
மாருதி s-presso மாடலுக்கு 38,000 ரூபாய் மற்றும் Celerio மற்றும் Ignis ஆகிய மாடல் கார்களுக்கு 41 ,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. டாடாவின் Nexon மாடல் கார்களுக்கு 56,000 ரூபாய் மற்றும் Tiago மாடல் கார்களுக்கு 35,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. மகேந்திராவின் Bolero Neo மாடலுக்கு அதிகபட்சமாக 82,000 ரூபாய் மற்றும் Bolero மாடலுக்கு 54,000 ரூபாய் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம்.
மின்சார வாகனங்கள் மற்றும் எஸ்யூவி ரக கார்களுக்கும் தற்போது தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஹூண்டாயின் Alcazar மாடல் கார்களுக்கு 45,000 ரூபாய் முதல் 65,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. மகேந்திராவின் XUV400 EV கார்களுக்கு ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை பண பலன்கள் கிடைக்கிறது. ஹோண்டா சிட்டியின் eHEV ரக காரர்களுக்கு 65,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பொதுவாகவே கார்களுக்கான தள்ளுபடிகள் என்பது அதிகமாக தான் இருக்கும் என FADAவின் தலைவர் மனிஷ் ராஜ் சிங்கானியா கூறியுள்ளார். இந்த முறை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதிக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications