ஆகஸ்ட் 1 முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு- மக்கள் அதிர்ச்சி!! கூடுதல் செலவு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அன்றாடம் லட்சக்கணக்கான மக்கள் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். நாம் ஊபர், ஓலா உள்ளிட்ட செயலிகள் வாயிலாகவும் புக் செய்து பயன்படுத்துகிறோம் அல்லது நேரடியாக ஆட்டோ ஸ்டாண்ட் சென்றும் ஆட்டோக்களில் பயணம் செய்கிறோம்.

ஆட்டோ கட்டணம் உயர்வு: குறிப்பாக பெங்களூரு போன்ற நகரங்களில் ஆட்டோக்களின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது . லட்சக்கணக்கான மக்களின் அன்றாட போக்குவரத்து வாகனமாக செயல்படுகிறது. இந்த சூழலில் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து பெங்களூருவில் ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆட்டோ களுக்கான அடிப்படை கட்டணங்களை உயர்த்திருப்பதாக பெங்களூரு ஆர்டிஏ அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 1 முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு- மக்கள் அதிர்ச்சி!! கூடுதல் செலவு எவ்வளவு தெரியுமா?

எவ்வளவு உயர்வு: பெங்களூரு மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த கட்டண உயர்வு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்திருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு தற்போது தான் பெங்களூருவில் ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என ஆர் டி ஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். பெங்களூரு நகரில் ஆட்டோக்களில் முதல் இரண்டு கிலோமீட்டருக்கான அடிப்படை கட்டணம் இது நாள் வரை 30 ரூபாயாக இருந்தது, ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 36 ரூபாய் என வசூல் செய்யப்படும்.

லக்கேஜ் கட்டணம் உயர்வு: இதன் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் இதுநாள் வரை 15 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது, இனி அது 18 ரூபாயாக வசூல் செய்யப்படும். இரவு நேர பயணங்களுக்கான கட்டணம் இன்னும் உயர்ந்திருக்கிறது. இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலான இரவு நேர பயணங்களுக்கு 50 சதவீதம் வரை ஆட்டோ கட்டணங்கள் உயர்கின்றன. மேலும் காத்திருப்பு மற்றும் லக்கேஜ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு: அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் ஆட்டோக்கள் முதல் ஐந்து நிமிடங்கள் காத்திருப்பதற்கு வாடிக்கையாளர் எந்த கட்டணமும் செலுத்து தேவையில்லை ஆனால் அதன்பிறகு ஒவ்வொரு 15 நிமிட காத்திருப்புக்கும் 10 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல 20 கிலோ வரையிலான லக்கேஜை இலவசமாக கொண்டு செல்லலாம். 20 கிலோவிற்கு மேல் கொண்டு செல்லப்படும் லக்கேஜ்களுக்கு கூடுதலாக இருக்கக்கூடிய ஒவ்வொரு கிலோவிற்கும் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை: ஆட்டோக்களில் அதிகபட்சம் 50 கிலோ வரையிலான லக்கேஜ் கொண்டு செல்லலாம் , பின் இருக்கையில் மூன்று பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களுடைய ஆட்டோவில் திருத்தப்பட்ட கட்டணங்களின் பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதலாக எவ்வளவு செலவிட வேண்டும்: அனைத்து ஆட்டோ மீட்டர்களும் புதிய கட்டணங்களுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வின் படி இதுநாள் வரை 5 கிலோமீட்டர் வரையிலான ஆட்டோ பயணத்துக்கு இதுநாள் வரை 75 ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில் ஆகஸ்ட் 1 முதல் 90 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் எரிபொருள் உயர்வு ,பராமரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, விலைவாசி உயர்வு காரணமாக ஆட்டோகளுக்கான அடிப்படை கட்டணங்களை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் தான் ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+