இன்றைய தொழில்நுட்ப உலகில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. அதில் முக்கிய மாற்றம் என்றால் ஆட்டோமேஷன். அதற்காக நிறுவனங்களும் தங்கள் பணி அமர்த்தும் அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. பல நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளை அதிக அளவில் பணியமர்த்தி, எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் "பெஞ்ச்" எனப்படும் ஒரு குழுவை பராமரித்து வந்தன. ஆனால் ஆட்டோமேசன் மற்றும் பிற காரணங்களால் இந்த முறை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
எந்த ப்ராஜெக்டிலும் பயன்படுத்தப்படாத ஊழியர்கள் பெஞ்ச்-சில் இருப்பார்கள். ஆனால் பென்ச்-சில் இருக்கும் ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். எந்த நேரத்தில் இவர்கள் தேவைப்படுகிறார்களோ அந்த நேரத்தில் அவர்கள் ப்ராஜெக்டுகளில் அசைன் செய்யப்படுவார்கள். ஒருவேளை ஏற்கனவே இருக்கும் ப்ராஜெக்ட்களில் யாரேனும் குறைந்தாலோ அல்லது அதிக அளவில் ஊழியர்கள் தேவைப்பட்டாலோ பெஞ்சில் இருக்கும் பணியாளர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இந்நிலையில் ஆட்டோமேஷன் அதிகரித்துள்ளதால் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தற்போது தொழில் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பரீக் கன்சல்டிங் மற்றும் EIIR ட்ரெண்டின் நிறுவனர் பரீக் ஜெயின், பணியாமர்த்தல் செயல்முறையில் உள்ள மாற்றங்கள் மற்றும் புதிய ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் பயிற்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சில விவரங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது ஆட்டோமேஷன் அதிகரித்துள்ளதால் நிறுவனங்கள் எதிர்காலத்திற்கு நிறைய ஊழியர்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து பல்வேறு ரோல்களுக்கான ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
ஆட்டோமேஷன் காரணமாக,சில முன்னணி IT நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களின் பயன்பாட்டு விகிதத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. முன்பு 80 முதல் 85 சதவீத ஊழியர்களே பணிபுரிந்து வந்தனர். மீதமுள்ள 15 சதவீத ஊழியர்கள் பெஞ்சில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறிவிட்டது.
இன்றெல்லாம் 90% ஊழியர்களை நிறுவனங்கள் பயன்படுத்துகிறது. மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே பெஞ்சில் உள்ளன. இதனால் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பல பணிகள் ஆட்டோமேஷன் மூலம் செய்யப்படுவதால் குறைவான பணியாளர்களே போதுமானதாக இருப்பதாக நிறுவனங்கள் கருதத் தொடங்கிவிட்டன. அதிக பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்துவதன் மூலம் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட முடியும். மாறாக பெஞ்சில் இருக்கும் பணியாளர்கள் வேலை செய்யவில்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.
அதோடு மேம்பட்ட தொழில்நுட்பங்களான ஜெனரேட்டிவ் AI போன்றவற்றில் நிபுணத்துவம் கொண்ட ஊழியர்களை பணியமர்த்துவதில் நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளது. புதிய பட்டதாரிகளை விட அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்துவதன் மூலம் AI சேவைகளை மேம்படுத்த முடியும் என்று நிறுவனங்கள் நம்புவதாக பரீக் ஜெயின் கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications