அடக் கொடுமையே.. ஏப்ரலில் யாரும் ஒரு வாகனம் கூட விற்பனை செய்யலையா.. இது ரொம்ப மோசம்..!

வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு மீண்டும் நடக்குமா? என்பது சந்தேகம் தான். ஒரு புறம் தங்களது வேலையினை இழந்து தவிக்கும் மக்கள். மறுபுறம் வேலையிருந்தும் பணிக்கு செல்ல முடியாத சூழல்.

உலகின் பெரும்பாலான நாடுகள் லாக்டவுன் என்னும் வலையால் பின்னப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்கள் அத்தியாவசியத் தேவைக்கே கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது.

இது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களை தவிர்க்குமாறு மத்திய மாநில அரசுகள் கூறி வருவதோடு, அத்தியாவசியம் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பூஜ்ஜிய விற்பனை

பூஜ்ஜிய விற்பனை

இதற்கு வாகன விற்பனை ஷோரூம்களும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2020ல் ஒரு வாகனங்களை கூட விற்பனை செய்யவில்லை என அறிவித்துள்ளன. இது குறித்து ஜிக் வீல்ஸ் தளத்தில் வெளியான செய்தியின் மூலம் அறிய முடிகிறது. நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஏப்ரல் 2019ல் 1,31,385 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஏப்ரல் 2020ல் ஒரு வாகனங்களை கூட விற்பனை செய்யவில்லை.

ஹூண்டாயும் அப்படித்தான்

ஹூண்டாயும் அப்படித்தான்

இதே ஹூண்டாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனங்களை கூட விற்பனை செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் 2019ல் 42,005 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதே மகேந்திரா நிறுவனம் கடந்த ஏப்ரல் 2019ல் 18,901 வாகனங்களை விற்பனை செய்துள்ள நிலையில், ஏப்ரல் 2020ல் ஒரு வாகனங்களை கூட விற்பனை செய்ய வில்லை.

டாடாவும் பூஜ்ஜிய விற்பனை

டாடாவும் பூஜ்ஜிய விற்பனை

இதே டாடா நிறுவனம் ஏப்ரல் 2020ல் 0 விற்பனையும், இதே ஏப்ரல் 2019ல் 12,695 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் ஏப்ரல் 2020ல் 0 விற்பனையும், இதே ஏப்ரல் 2019ல் 11,272 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்ற நிறுவனங்களின் விற்பனை

மற்ற நிறுவனங்களின் விற்பனை

டொயோட்டா நிறுவனம் ஏப்ரல் 2020ல் 0 விற்பனையும், இதே ஏப்ரல் 2019ல் 10,112 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளதாகவும், இதே ஃபோர்டு நிறுவனம் ஏப்ரல் 2020ல் 0 விற்பனையும், இதே ஏப்ரல் 2019ல் 6,515 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே ரெனால்ட் நிறுவனம் ஏப்ரல் 2020ல் 0 விற்பனையும், இதே ஏப்ரல் 2019ல் 6,256 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிசான் மோட்டார்ஸ் விற்பனை

நிசான் மோட்டார்ஸ் விற்பனை

நிசான் மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் 2020ல் 0 விற்பனையும், இதே ஏப்ரல் 2019ல் 2,027 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஏப்ரல் 2020ல் 0 விற்பனையும், இதே ஏப்ரல் 2019ல் 1,995 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

லிஸ்டில் இவர்களும் உண்டு

லிஸ்டில் இவர்களும் உண்டு

இந்த லிஸ்டில் எஃப்சிஏ மற்றும் ஸ்கோடா, கியா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் 0 விற்பனையை மட்டுமே செய்துள்ளன. ஏற்கனவே அதள பாதாளத்தில் இருந்து தற்போது தான் ஆட்டோமொபைல் துறை சற்று ஏற்றம் கண்டு வரும் நிலையில், மீண்டும் இந்த லாக்டவுனால் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

வரலாறு காணாத அளவு சரிவு

வரலாறு காணாத அளவு சரிவு

ஒரு வேளை லாக்டவுன் முடிந்தாலும் கூட, முன்பு போல விற்பனை இருக்குமா? என்ற சந்தேகம் தான் நிலவி வருகிறது. ஏனெனில் பொருளாதாரம் மீண்டு வர சில காலம் ஆகும். ஆக மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தான் விற்பனை அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் மீண்டும் வரலாறு காணாத சரிவில் தான் இந்திய ஆட்டோ மொபைல் துறை உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+