ஒருகாலத்தில் மிகக் குறைந்த விலையுள்ள கார்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது ரூ.5 லட்சத்துக்குக் குறைவான விலையுள்ள கார்களுக்கான கிராக்கி மிகவும் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாகவே கூடுதல் அம்சங்கள், பாதுகாப்பு அமைப்புகள் நிறைந்த பெரிய கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சத்துக்கு குறைந்த விலையுள்ள கார்கள் சந்தையில் 33.6 பங்கை வகித்தன. ஆனால் 2023 ஆம் ஆண்டில் இது 0.03 சதவீதம் குறைந்து விட்டது. சாமானிய மக்களுக்குக் கட்டுபடியான விலையுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி கூட விற்பனை குறைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்துக்கு குறைவான விலையுள்ள கார்களின் விலை அளவுகள் அதிகரித்து விட்டது. எஸ்யூவி, சொகுசு கார்கள், செடான்களின் விலை இத்துடன் ஒப்பிட்டால் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதி சுசூகியின் ஆல்ட்டோ, எஸ்-பிரஸ்ஸோ மாடல்களின் விற்பனை சரிந்து விட்டது.
அதேவேளையில் ரூ.7 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பலீனோ, பெரஸ்ஸோ, கிராண்டு விட்டாரா, மாருதி சுசூகி விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
மாருதி சுசூகியின் மூத்த செயல் அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், சிக்கனமான கார்களுக்கான தேவை குறைவதற்கு கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து வருமானம் குறைவதால் மட்டும் ஏற்படவில்லை.
மாறாக, வாடிக்கையாளர்கள் இப்போது மேம்படுத்தப்பட்ட இணைப்பு அம்சங்கள், சிறந்த குடும்ப பாதுகாப்பு மதிப்பீடுகள், பொழுதுபோக்கு விருப்பங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகள் கொண்ட கார்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரைகள், 360 டிகிரி கேமராக்கள் மற்றும் சன்ரூஃப்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள விருப்பத்தை இந்தப் போக்கு சுட்டிக்காட்டுகிறது.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், நுகர்வோர் மிகவும் விரிவான மற்றும் நவீன ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் கார்களில் செலவிட தயாராக உள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையில் இப்போது ரெனால்ட் டஸ்ட்டர், கியா போன்ற நிறுவனங்கள் ரூ.8 லட்சத்துக்குள் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. இந்தக் கார்களின் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இவற்றில் பல புதிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் இப்போது அரசு மானியத்துடன் விற்பனையாகும் மின்சார வாகனங்களுக்கும் நிறைய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications