சென்னை: ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் பிரச்சனை காரணமாக ஏற்கனவே பல ஆயிரம் பேர் இத்துறையில், தங்களது பணியினை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் அல்லாது, வாகன உதிரி பாகங்கள் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன.
கடந்த ஆண்டு அட்டோமொபைல் துறை தான் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது எனில், நடப்பு ஆண்டிலும் இந்த வீழ்ச்சி தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போஷ் நிறுவனம் இந்தியாவிலும் தனது கிளையை நிறுவியுள்ளது.
போஷ் எடுத்த அதிரடி முடிவு
உலகின் மிகப்பெரிய வாகன உதிரி பாகங்கள் சப்ளையரான போஷ் லிமிடெட், அதன் பெற்றோர் நிறுவனமான ஜிஎம்பிஹெச் உடன் இணைந்து பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தெற்காசிய நாடான இது பல தசாப்தங்களாக அதன் மோசமான நிலையை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் வாகன விற்பனை மேலும் மோசமடைந்துள்ளன.
எத்தனை பேர் பணி நீக்கம்?
ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிளையின் நிர்வாக இயக்குனர் சவுமித்ரா பட்டாச்சார்யா கூறுகையில், 3,700 வெயிட் காலர் பணியில் 10 சதவிகிதம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 6,300 ப்ளு காலர் பணியில் அதிகளவிலான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் பெங்களுருவில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் பணி நீக்கம்
உலகெங்கிலும் உள்ள கார் தயாரிப்பாளர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் 80,000 வேலைகளை குறைத்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. இது இத்துறையில் நிலவி மந்த நிலையின் எதிரொலி, தேவை குறைவால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் நிறுவனம் பாதிக்கப்படும் என்றும், இதனால் உதிரி பாகங்கள் துறையிலும் பணி நீக்கம் தொடரலாம் என்றும் கருதப்படுகிறது.
அடுத்த சில ஆண்டுகளில் சீரடையலாம்
இந்த நிலையில் போஷ் நிறுவனம் அடுத்து வரும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் வாகன விற்பனை சீரடையும் என்றும், இதனால் அந்த சமயத்தில் விற்பனை சீரடையும் என்றும் போஷ் நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பங்கு விலை
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் போஷ் நிறுவனம் அதன் நிகரலாபத்தில் 66 சதவிகித வீழ்ச்சியை கண்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அதன் பங்கு விலை 22 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை 121 ரூபாய் ஏற்றம் கண்டு, 15,399 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications