விட்ட குறை தொட்ட குறையாக ஆட்டோமொபைல் துறையில் இன்று வரை பிரச்சனை முடிந்தபாடாக இல்லை.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே ஆட்டொமொபைல் துறையை பாடாய் படுத்தி வரும் மந்த நிலையின் தாக்கம், இன்று வரை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஒரு புறம் மந்த நிலை, மறுபுறம் தொடர் விற்பனை சரிவு. இவற்றால் கதிகலங்கி போயுள்ள ஆட்டோமொபைல் துறையில் ஏற்கனவே பல ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர்.
50% வீழ்ச்சி
இது ஒரு புறம் இருந்தாலும், இந்த விற்பனை சரிவினை நீக்க, பல ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பல சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றனர். எனினும் இவை யாவும் கைகொடுத்தாக தெரியவில்லை. இந்த கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் 50.33 சதவிகிதம் விற்பனை குறைந்து 6,459 வாகனங்களாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 13,006 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எண்ணியதை விட பரவாயில்லை
விற்பனை பாதிக்கு பாதியாக குறைந்திருந்த போதிலும், இந்த நிறுவனம் நாங்கள் எண்ணியதை விட பரவாயில்லை என்றும் கூறியுள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தலைவரும் மற்றும் விற்பனை, சந்தைப்படுத்துதல் இயக்குனருமான ராஜேஷ் கோயல் நாங்கள் நவம்பரில் விற்பனை எதிர்பார்த்ததை விட விற்பனை பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த நிலைமை மாறும்
விற்பனை மந்த நிலை குறித்து ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கூறுகையில், பிஎஸ் 4ன் கடைசி கட்டத்தில் நாங்கள் உள்ளோம். ஆக இது பிஎஸ் 6 விதிகளுக்கு மாறும்போது இந்த மோசமான நிலை மாறும். அந்த நேரத்தில் விற்பனை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஹோண்டா ஒரு புறம் இப்படி அறிக்கை விடுத்துள்ளது எனில், மறுபுறம் மற்ற நிறுவனங்களும் இதே நிலையில் தான் உள்ளன.
என்ன சொல்கிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் கடந்த ஞாயிறு கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த நவம்பரில் 25.32 சதவிகிதம் மொத்த விற்பனை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது நவம்பரில் 41,124 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் 55,074 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாயில் விற்பனை அதிகரிப்பு
ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஞாயிறு கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த விற்பனை 7.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த நவம்பரில் 60,500 வாகனங்களையும், முந்தைய ஆண்டு இதே காலத்தில் 56,411 வாகனங்களையும் விற்பனை செய்திருந்ததாக தெரிவித்துள்ளது.
மாருதியும் வீழ்ச்சி தான்
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியாவும் கடந்த நவம்பரில் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக பயணிகள் வாகன விற்பனை மட்டும் 3.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக இந்த ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இதன் மூத்த நிறுவனம் இது குறித்து கடந்த மாதமே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மகேந்திரா அன்ட் மகேந்திரா
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மகேந்திரா அன்ட் மகேந்திராவிலும் விற்பனை 9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 41,235 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 45,101 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு சில நிறுவனங்கள் தவிர பல நிறுவனங்கள் விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல ஆயிரம் பேர் வேலையை இழந்து தவிக்கும், இந்த நிலையில், இதே நிலை நீடித்தால் இன்னும் வேலை வாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளது. ஆக அரசு அதற்கு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இத்துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications