சில காலமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பான் கார்டை முக்கிய ஆவணமாக வைத்துக்கொண்டு லோன் வழங்கி வருகிறது. பான் கார்டு லோன் என்பது பான் கார்டை வைத்து வழங்கக்கூடிய தனிநபர் கடன் ஆகும். முக்கியமான KYC ஆவணங்களாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்து வருகிறது. இந்நிலையில் கடன் பெற விண்ணப்பிப்பவரின் நிதித் தகுதியைத் தீர்மானிக்கவும், அவர்களின் கடன் வரலாற்றை மதிப்பிடவும் பான் கார்டு இன்றியமையாத ஒன்று.
இதனால் தான் வங்கிகள், ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த 2 ஆவணங்களும் சரியாக இருந்தால் போதும் கடன் பெறும் செயல்முறை எளிதாகிவிடும். அதோடு விரைவாக கடன் பெற இந்த இரண்டு ஆவணங்களைத் தான் வங்கிகள் கேட்கின்றன. பான் கார்டை வைத்து பெறக்கூடிய லோன்கள் அவசரத் தேவைகள் மற்றும் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது.

பெரும்பாலும் இந்த வகைக் கடன்களை ஆன்லைனிலேயே எளிதாகப் பெற முடியும். இந்தப் பதிவில் பான் கார்டு லோன் பெற என்னென்ன விஷயங்கள் தேவை என்பது குறித்து விரிவாக பார்ப்போம். சட்டவிரோதமாக நடைபெறும் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த பான் கார்டு உதவுகிறது. வங்கி கணக்குடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாகும். பான் கார்டு லோனுக்கும் இதுதான் தேவை.
ஆன்லைனில் பான் கார்டு லோனுக்கு விண்ணப்பிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
பான் கார்டை வைத்து பெறக்கூடிய லோனுக்கு பான் மற்றும் ஆதார் கார்டு இருக்க வேண்டும். இவை இரண்டும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வகையில் லோனுக்கு பான் கார்டு தான் மிக முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. ஒருவேளை நீங்கள் ஆதாருடன் உங்கள் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் ஆன்லைன் மூலம் கடன் பெறும்போது தாமதம் ஏற்படலாம். இந்த வகை லோன்களும் பர்சனல் லோன்களைப் போலத்தான்.
நீங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு வைத்திருந்து, அதை இணைத்து வைத்திருந்தால் கடன் ஒப்புதல் 24 மணி நேரத்திற்குள் செய்யப்படும்.
ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?: முதலாவதாக அடையாளச் சான்றிதழ் தேவை. ஆதார் கார்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற சான்றிதழின் நகல் தேவைப்படும்.
ஆதார் கார்டு பாஸ்போர்ட் லைசென்ஸ் போன்றவற்றை முகவரி சான்றாக வழங்க வேண்டியிருக்கும். கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் செய்த வங்கி பரிவர்த்தனையின் அறிக்கை தேவைப்படும். அதோடு கடைசி இரண்டு மாதங்களின் பே ஸ்லிப் அல்லது தற்போதைய தேதியிட்ட சம்பள சான்றிதழ் படிவம் 16 போன்றவை தேவைப்படலாம்.
பான் கார்டு லோனின் சிறப்பம்சங்கள்:
எளிதான விண்ணப்ப செயல்முறை: நீங்கள் கடன் பெற விண்ணப்பிப்பது மிகவும் எளிதான செயல்முறையாக இருக்கும். ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அதற்கு அடிப்படை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பான் கார்டு உதவியுடன் இ-கேஒய்சி செயல்முறை முடிக்க வேண்டும்.
விரைவான ஒப்புதல்: பான் கார்டு இருந்தால் தனி நபர் கடன் பெறுவது விரைவாக இருக்கும். அவசர காலங்களில் ஏற்படும் சிக்கலைத் தவிர்ப்பதற்கு இதுபோன்ற லோன்கள் உதவிகரமானதாக இருக்கும்.
போட்டி வட்டி விகிதங்கள்: இன்றெல்லாம் பல கடன் வழங்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு லோன்களை வழங்குகின்றன. இதனால் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.
குறைந்தபட்ச ஆவணங்கள்: பிறவகை கடன்களோடு ஒப்பிடும்போது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற சில ஆவணங்கள் மட்டுமே இந்த வகை லோன்களுக்கு தேவை.
நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதி: கடன் வழங்குபவர்கள் பல ஆப்ஷன்களைக் கொடுக்கின்றனர். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்து திருப்பிச் செலுத்தலாம். ஒவ்வொருவரின் நிதித் தேவை மற்றும் நிதி நிலைக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் காலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
தகுதி: பான் கார்டு லோன் பெற ஒருவர் பின்வரும் தகுதியைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் வயது 21 முதல் 60 வயது வரையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக பான் கார்டு, ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். அதோடு நல்ல கிரெடிட் ஸ்கோர் முக்கியம்.
விண்ணப்பதாரருக்கு நிலையான வருமானம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் பான் கார்டை வைத்து லோன் வழங்கக்கூடிய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் சென்று எளிதில் கடன் பெறலாம். அப்படி இல்லை என்றாலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கும் போது உண்மையிலேயே ஆர்பிஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குனரா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் தற்போது மோசடி சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் ஏதேனும் மோசடி அப்ளிகேஷன்களில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே ஆராய்ச்சியை மேற்கொண்டு தேவைப்பட்டால் மட்டும் கடன் பெற விண்ணப்பிக்கவும். லோன் பெற விண்ணப்பிக்கும் போது முன்னணி வங்கிகள், NBFC-கள் போன்ற நற்பெயர் கொண்ட கடன் வழங்குனரைத் தேர்ந்தெடுங்கள். லோன் அப்ளிகேஷன்களை நம்ப வேண்டாம். லோன் அப்ளிகேஷன்களில் கடன் பெற்று அதன் பிறகு அதீத வட்டியின் காரணமாக கடன் சுமையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட பலரின் கதைகள் நம் நாட்டில் அரங்கேறியுள்ளது.
எனவே எப்போது கடன் பெற விண்ணப்பித்தாலும் வங்கிகள் அல்லது NBFC நிறுவனங்கள் போன்றவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கடன் பெறுங்கள். கேள்விப்படும் அப்ளிகேஷன்களில் எல்லாம் கடன் பெற்று ஏமாற வேண்டாம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications