தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்?

இந்தியாவின் சில்லறை விற்பனை துறையில் சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கணிசமான அளவு இருந்து வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 41.60% அதிகரித்து, 271.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 191.57 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

 தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்?

இதே வருவாய் 23.6 சதவீதம் அதிகரித்து 6,255.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 5,061.65 கோடி ரூபாயாக இருந்துள்ளது. எனினும் இன்று இதன் பங்கு விலையானது கிட்டதட்ட 5 சதவீதம் குறைந்து 2,282.45 கோடி ரூபாயாக குறைந்து லோவர் சர்க்யூட் ஆகியுள்ளது.

நாடு முழுவதும் மே 31 வரை லாக்டவுனால் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் மார்ச் மாத காலாண்டில் ஒட்டுமொத்தமாக லாபம் கண்டுள்ளது. ஆனால் மார்ச் மாதத்தினை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள போது, லாக்டவுன் காரணமாக வெறும் 11 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நெவில் நோரோநா தெரிவித்துள்ளார்.

மேலும் லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய தேவை தவிர மற்ற பொருட்களுக்கு அனுமதி கிடைக்காததால் தான் இந்த வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய வணிகத்தினை கருத்தில் எடுத்துக் கொள்ளும் போது, அது எந்த அளவுக்கு வீழ்ச்சி காணுமோ? என்ற உணர்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குளை முதலீட்டாளர்கள் எதிர்மறையான பார்வையில் வைத்துள்ளனர். இதன் காரணமாக இதன் பங்கு விலையானது இன்று லோவர் சர்க்யூட் ஆகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் அதன் வருவாய் 45 சதவீத வருவாய் வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.

இன்று இருக்கும் நிலையில் லாக்டவுன் முழுமையாக நீக்கப்பட்டாலுமே கூட, மக்கள் கையில் செலவு செய்ய பணம் இல்லை. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம் இன்னும் மோசமடையக் கூடும் என்ற நிலையே நீடித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இந்த பங்கிலிருந்து தற்பபோது விலகியே இருக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+