தீபாவளி சீசனில் விமான பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பல உள்நாட்டு விமானங்களுக்கான விமான கட்டணங்கள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிகரித்த விமானப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விலை சமீபத்தில் குறைந்திருப்பது போன்ற காரணங்களால் விமான டிக்கெட் விலை குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ixigo-வின் பகுப்பாய்வின் படி உள்நாட்டு பாதைகளில் இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டணம் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. எப்பொழுதுமே விமான கட்டணங்கள் பண்டிகை காலங்கள் வந்தால் உயரும். அதற்காக ரயில் டிக்கெட்கள் மற்றும் விமான டிக்கெட்களை பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்து விடுவார்கள்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 10 முதல் 16-ஆம் தேதி வரையிலான நாட்களில் பயணிகள் முன்பதிவு செய்தனர். இந்த ஆண்டு அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை முன்பதிவு செய்து வருகின்றனர். எனவே இந்தக் காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணங்கள் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்திற்கான சராசரி விமான டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 38 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி விமான டிக்கெட்டுகள் 10,195 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.6319 ரூபாயாக குறைந்துள்ளது.
சென்னை-கொல்கத்தா செல்லும் விமானத்திற்கான டிக்கெட் விலை 36% குறைந்து ரூ.5,604 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.8,725 ஆக இருந்தது.
மும்பை-டெல்லி விமானத்திற்கான சராசரி விமான கட்டணம் 34% குறைந்து ரூ.5,762 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.8,788 ஆக இருந்தது. இதேபோல், டெல்லி-உதய்பூர் பாதையில் டிக்கெட் விலை 34% குறைந்து ரூ.7,469 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.11,296 ஆக இருந்தது.
டெல்லி-கொல்கத்தா, ஹைதராபாத்-டெல்லி மற்றும் டெல்லி-ஸ்ரீநகர் பாதைகளில் விமான டிக்கெட் கட்டணம் 32 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது குறைந்த அளவிலான பயணிகளின் காரணமாக விமான டிக்கெட் விலை உயர்ந்தது. மேலும் கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவும் டிக்கெட் விலை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது என்று ixigo குரூப் சிஇஓ அலோக் பஜ்பாய் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 15 சதவீதம் குறைந்த எண்ணை விலை,பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு உதவியுள்ளது. தற்போது அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் எண்ணெய் விலை சற்று மேல் நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. இன்னும் சில விமான வழித்தடங்களில் விமானக் கட்டணம் 34 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக அகமதாபாத்-டெல்லி வழித்தடங்களில் விமான டிக்கெட் விலை 34 சதவீதம் உயர்ந்து 6,533 ரூபாயிலிருந்து 8,758 ரூபாயாகவும், மும்பை-டேஹ்ராடூன் பகுதியில் விமான டிக்கெட் விலை ரூ.11,710 ரூபாயிலிருந்து, ரூ.15,527 ஆக 33 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications