டெல்லி: அண்மையில் ஜியோ, ஏர்டெல் , வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் செல்போன் சேவை கட்டணங்களை கணிசமாக உயர்த்தின. இது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த நிறுவனங்கள் செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு எப்படி அனுமதி வழங்கியது என மக்களுக்கு பதில் கூறியாக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செல்போன் சேவைகளுக்கான வாடிக்கையாளர் கட்டணத்தை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்வதற்கு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொலை தொடர்பு சேவை கட்டணங்களை நிறுவனங்கள் உயர்த்தி இருப்பதாகவும், உலக அளவில் இந்தியாவில்தான் செல்போன் சேவைகளுக்கான கட்டணம் குறைவாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிகா, பிரிட்டன், ரஷ்யா, பிரேசில், இந்தோனேஷியா, எகிப்து ஆகிய நாடுகளின் செல்போன் கட்டணங்களையும் ஒப்பிட்டு மத்திய அரசு இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பாதுகாப்பதோடு, 5g, 6g போன்ற சேவைகளுக்கான புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கும் நிதி ஆதாரம் தேவை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு கொள்கைகள் காரணமாக செல்போன் சேவை கட்டணம் பரவலாக குறைந்துள்ளது என்ற ஒரு கருத்தையும் மத்திய அரசு முன்வைத்துள்ளது.
140 நிமிடங்கள் வாய்ஸ் கால் + 70 SMS + 2GB டேட்டா ஆகியவற்றை பெற மற்ற நாடுகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் வெளியிட்டுள்ளது. இதன்படி,
சீனா - 8.84 டாலர்
ஆப்கானிஸ்தான் - 4.77 டாலர்
பூடான் - 4.62 டாலர்
வங்கதேசம் - 3.24 டாலர்
நேபாளம் - 2.75 டாலர்
இந்தியா - 1.89 டாலர்
பாகிஸ்தான் - 1.39 டாலர்
அமெரிக்கா - 49 டாலர்
தென்னாபிரிக்கா - 15.8 டாலர்
பிரிட்டன் - 12.5 டாலர்
ரஷ்யா - 6.5 டாலர்
பிரேசில் - 6 .06 டாலர்
இந்தோனேஷியா - 3.29 டாலர்
எகிப்து - 2.55 டாலர்
இந்தியாவில் 1.89 டாலர்கள் செலுத்தினால் ஒரு மாதத்திற்கு நமக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 18 ஜிபி டேட்டா கிடைக்கிறது என மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications