இந்திய அரசு எரிபொருள் மீதான செலவுகளை குறைக்க பல முக்கிய மாற்றங்களை செய்து வரும் வேளையில் பயோபியூல் மற்றும் பயோகேஸ் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரிக்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நிலையான விமான எரிபொருள் அதாவது SAF எனப்படும் Sustainable Aviation Fuel பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் விமான எரிபொருளில் வெறும் 1 சதவீதம் பயோபியூயல் கலப்பதால், இந்தியாவில் 5 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஜி20 கூட்டத்தில் இந்தியா உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜிபிஏ) அறிமுகப்படுத்தியதில் மிகவும் முக்கிய கோரிக்கை மற்றும் பிரிந்துரைகளில் ஒன்று விமானங்களில் பயன்படுத்தப்படும் நிலையான எரிபொருளாக பயோபியூயல் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதும் அடங்கும் என ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
பெட்ரோலுடன் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் எட்ட இலக்கை நிர்ணயம் செய்ததை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்குள் அடைய உள்ளது என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இந்தியாவில் நிலையான விமான எரிபொருளுக்கு 1 சதவீத பயோபியூயல் எரிபொருள் கலப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் 5 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதோடு பயோபியூயல் எரிபொருள் கலவையின் அளவை 5 சதவீத்தில் இருந்து உயர்த்தினால், கூடுதலாக 70 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
கடந்த 9 வருட ஆட்சியில் பயோபியூயல் பயன்பாட்டின் மூலம் சுமார் 73000 கோடி ரூபாயை கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் சேமிக்கப்பட்டு உள்ளது. இதன் தொகை மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கு 76000 கோடி ரூபாய் அளிக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.
பயோபியூயல் என்பது எத்தனால் கலக்கட்டப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல். சோளம், சோர்கம் மற்றும் பார்லி ஆகியவற்றில் இருக்கும் ஸ்டார்ச் மற்றும் கருப்பில் இருந்து சர்க்கரை தயாரிப்பில் செய்யப்படும் ஃபெர்மென்டேஷன் மூலம் எத்தனால்-ஐ எளிதாக உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும்.


Click it and Unblock the Notifications