கிரெடிட் கார்டுகள் நம்ப முடியாத அளவுக்கு மக்களுக்கு வசதியான ஒன்றாக மாறியிருக்கிறது. குறிப்பாக நிதி நெருக்கடியின் போது பலரும் கிரெடிட் கார்டுகளை நம்பித்தான் இருக்கின்றனர். வட்டி இல்லா காலம், ரிவார்ட் பாய்ண்டுகள், சலுகைகள் என செலவுகளை நிர்வகிப்பதில் பயனுள்ள ஒன்றாக கிரெடிட் கார்டுகள் உள்ளன. இருப்பினும் கிரெடிட் கார்டுகளோடு தொடர்புடைய கட்டணங்கள் குறித்து தெரியாமலேயே மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பணம் எடுத்தல்: பொதுவாக ATM கார்டில் இருந்து பணம் எடுப்பது போலவே கிரெடிட் கார்டுகளில் இருந்தும் பணம் எடுத்துக் கொள்ளலாம். இது அவசர காலங்களில் வசதியான விருப்பமாக தோன்றினாலும் ATM கார்டுகளுடன் ஒப்பிடும்போது அதிக கட்டணத்திற்கு வழி வகுக்கலாம். வங்கிகள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடன் வரம்பில் 20 முதல் 40 சதவீதத்தை பணமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றன. உதாரணமாக உங்கள் கடன் வரம்பு ரூ.5 லட்சம் என்றால்.. அதில் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை பணமாக எடுக்கலாம். ஆனால் இதற்கு கட்டணங்கள் விதிக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் பணத்தை எடுக்கும்போது, திரும்பப் பெறப்பட்ட தொகையில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக, நீங்கள் ரூ. 1 லட்சம் பணம் எடுத்தால், ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரை கட்டணம் விதிக்கப்படலாம். இந்த கட்டணங்கள் நீங்கள் பணம் எடுத்த உடன் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து கழிக்கப்படும்.
வட்டி இல்லாத காலம்: வழக்கமாக கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியாக செலுத்தினால் 45 முதல் 50 நாட்கள் வரை வட்டி இல்லாத காலம் இருக்கும். ஆனால் ரொக்கமாக பணம் எடுப்பதனால் இத்தகைய நன்மை பாதிக்கப்படலாம். ஏனெனில் பணம் எடுத்த தருணத்திலிருந்து வட்டி குவியத் தொடங்கி விடும். மேலும் வட்டி தினசரி கூடிக் கொண்டே இருக்கும்.
கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு: அதிக அளவில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பதனால் அதற்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு கடன் சுமை அதிகரிக்கலாம். கடன் சுமை அதிகரித்து உங்களால் அதை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் அது பாதிக்கும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் கடன் பெற முடியாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு.
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பதனால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பார்த்தோம். எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் பணம் பெறுவதற்கான மாற்று வழி என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
தனிநபர் கடன்கள்: பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் தனி நபர் கடன்களை வழங்குகின்றன. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுத்து தேவையில்லாத நிதி சிக்கலுக்கு ஆளாவதை விட தனி நபர் கடன்களை வாங்கிக் கொள்ளலாம். தற்போது பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
தங்க நகை கடன்: இது மிகவும் எளிதில் பெறக்கூடிய கடனாகும். இதற்கு ஆவணங்கள் எதுவும் தேவைப்படாது. உங்களிடம் தங்க நகைகள் இருந்தால் அதை வைத்து நீங்கள் உடனடியாக கடன் பெறலாம். எனவே அவசர காலங்களுக்கு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதை விட, இதுபோன்ற மாற்று வழியை யோசிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications