உலகமே உற்றுநோக்கிய ஆக்ஸியம் - 4 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ், ஆக்ஸியம் நிறுவனம் , நாசா, இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்ஸியம் -4 திட்டத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. இந்தியாவை சேர்ந்த சுபான்ஷூ சுக்லா இந்த விண்கலத்தை இயக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். விண்கலம் வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய நிலையில் ஜெய்ஹிந்த், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் பயணம் தொடங்கிவிட்டது , நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக செலுத்தப்பட்டது : நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் அறிவித்த படி இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் இந்த விண்கலம் ஏவப்பட்டது. இது ஸ்பேஸ் எக்ஸின் எக்ஸ் தள பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலமானது விண்ணில் செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட் தொலைவு சென்ற பிறகு ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து சென்றது.

ஜெய்ஹிந்த் என கூறி பயணம் தொடக்கம்: விண்வெளி பயணத்தை தொடங்கியவுடன் பேசிய இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா " என் அன்பான நாட்டு மக்களே, வணக்கம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் இருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம் என கூறியிருக்கிறார். பூமியை வினாடிக்கு 7.5 கிலோ மீட்டர் வேகத்தில் நாங்கள் தற்போது சுற்றி வருகிறோம். என் தோள்களில் நான் இந்திய தேசியக் கொடியை சுமந்து இருக்கிறேன் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்பதையே இது காட்டுகிறது எனக் கூறியிருக்கிறார். என்னுடைய இந்த பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஒரு பயணம் மட்டுமல்ல இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு தொடக்கம் என தெரிவித்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இந்த பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் எனக் கூறியிருக்கும் அவர் இந்தியர்கள் இதனை நினைத்து பெருமைப்படுங்கள் நாம் அனைவரும் ஒற்றுமையோடு இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை தொடங்குவோம் .ஜெய்ஹிந்த்! ஜெய்பாரத்!" என கூறினார்.
வரலாறு படைக்கும் இந்தியா: இந்த விண்கலத்தில் அமெரிக்காவின் பெக்கி விட்சன், இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, போலந்தின் சுலாவோஸ் உஸ்வான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் டிபோர் கபு என மொத்தம் நான்கு பேர் விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்திய விமானப்படை விமானியான குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா இந்த விண்கலத்தை இயக்கும் முக்கிய பொறுப்பை ஏற்றி இருக்கிறார். ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லக்கூடிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை சுக்லாவுக்கு கிடைத்துள்ளது.
நாளை விண்வெளி நிலையத்தை அடைவார்கள்: இன்று மதியம் ஏவப்பட்ட விண்கலம் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்றும் இந்த நான்கு வீரர்களும் 14 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1984 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா பயணம் செய்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றொரு வீரரை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.
யார் இந்த சுபான்ஷூ சுக்லா ?: 40 வயதாக கூடிய இவர் இஸ்ரோவால் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவர். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் இந்திய விமானப்படையில் சேர்ந்தார் 2024 ஆம் ஆண்டில் குரூப் கேப்டனாக பொறுப்பேற்றார். 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ ககன்யான் எனப்படும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக தொடங்கப்பட்ட திட்டத்திற்காக சுக்லாவை ஒரு வீரராக தேர்வு செய்தது.
ரஷ்யாவில் பயிற்சி: சுக்லா ஐஐஎஸ்சி பெங்களூருவில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் எம்டெக் படிப்பை முடித்து இருக்கிறார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் இளநிலை படிப்பை முடித்துள்ளார். Su-30 MKI, MiG-29, Jaguar, Hawk ஆகிய விமானப்படை விமானங்களை இயக்கிய அனுபவம் இவருக்கு உண்டு. 2,000 Flight hours கொண்ட இந்திய வீரர் என்ற பெருமை கொண்டவர். 2019 ஆம் ஆண்டு ககன்யான் விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் .ரஷ்யாவின் யுரி ககாகரி பயிற்சி மையத்தில் விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதனை அடுத்து நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் விண்வெளி மையத்தில் தீவிர பயிற்சிக்கு சென்றார்.
விண்கலத்தை இயக்கும் பொறுப்பு : ஆக்ஸியம் நிறுவனம், நாசா, இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த ஆக்ஸியம் 4 திட்டத்தை நிறைவேற்றுகின்றன. இதில் விண்கலத்தை இயக்கும் பொறுப்பு முழுவதுமாக சுக்லாவிடமே இருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்டு விண்வெளிக்கு சென்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அங்கிருந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் வரை விண்கல இயக்கத்திற்கு இவரே பொறுப்பு. திட்டத்திற்கு தலைமை பொறுப்பில் இருப்பவர் பெக்கி விட்சன். இவர் முன்னாள் நாசா விண்வெளி வீரர்.
விண்வெளியில் என்ன பணி: சைனோ பாக்டீரியா எனப்படும் ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய ஒரு வகையான நீர் வாழ் பாக்டீரியா குறித்து சுக்லா ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்புக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது. அதே போல விண்வெளி நுண்ணுயிரி பாசிகள் குறித்தும் சுக்லா ஆய்வு செய்ய இருக்கிறார் .எதிர்காலத்தில் விண்வெளிக்கு செல்லக்கூடிய வீரர்களுக்கு உணவு எரிபொருள் உள்ளிட்ட தேவைக்காக இது மிகவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications