டெக் துறையில் தான் அடிக்கடி பணிநீக்கம் நடைபெற்று வருகிறது என்ற பார்த்தால் தற்போது இது வங்கி துறைக்கும் இந்த வியாதி தொத்திக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 5 வருடமாக அதிகளவிலான ஆட்டோமேஷன், ஏஐ, டிஜிட்டல் பேங்கிங், இண்டர்நெட் பேங்கிங் ஆகியவை மேம்படுத்தப்பட்டு இருக்கும் வேளையில் பல வங்கிகளும், வங்கி ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு வந்தனர்.
அதிலும் குறிப்பாக இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், சர்வதேச முதலீட்டுச் சந்தையில் செயல்படும் பெரும் வங்கிகள் அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு வந்தது, இவர்கள் டெக் துறையிலும், பிற முதலீட்டு சார்ந்த துறையிலும் இடம்மாறியது நடந்து வந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் வங்கி நிர்வாகங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

அண்மையில் சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் பரவி வந்த பல்வேறு ஊகங்களுக்குப் பதிலடியாக, அக்சிஸ் வங்கி வியாழக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளது. வங்கி சில ஊழியர்களை வேலையில் இருந்து விலகும்படி அறிவுற்றுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு இந்திய வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆக்சிஸ் வங்கி இந்த பணிநீக்கம் குறித்துக் கூறுகையில் இது ஊழியர்களின் தனிப்பட்ட செயல்பாட்டு மதிப்பீடுகளில் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு எனக் கூறியுள்ளது. இந்த முடிவு, வங்கியின் வழக்கமாக மேற்கொள்ளப்படும் வருடாந்திர செயல்பாட்டு மதிப்பீடு பணியில் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
ஊழியர் பணிநீக்கம் மூலம் வங்கியில் நிதி தொடர்பான பிரச்சினைகள் அல்லது அச்சுறுத்தல்கள் இருப்பதாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய வங்கிகளில் பெரும்பாலும் பணிநீக்கம் என்பது மிகவும் அரிது, இப்படியிருக்கையில் ஆக்சிஸ் வங்கியில் 100க்கும் அதிகமான மூத்த ஊழியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளனர்.
அக்சிஸ் வங்கியில் 100க்கும் மேற்பட்ட மூத்த ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கியது குறித்து இவ்வங்கியின் மேலாண்மை இயக்குநர் அமிதாப் சௌத்ரி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், பெரிய அமைப்புகளில் நடைமுறையில் உள்ளபடி, அக்சிஸ் வங்கியும் ஒவ்வொரு நிதியாண்டு முடிவில் தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்வதாகத் தெரிவித்தார்.
இந்த மதிப்பீட்டின் போது, சிறப்பாகச் செயல்பட்ட ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவதாகவும், அதே சமயம் சிலர் எதிர்பார்க்கப்பட்ட தரத்தை அடைய முடியாவிட்டால், அது பணிநீக்கம் போன்ற இக்கட்டான நிலைக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக, சிலர் வேலையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகலாம் என்று தெரிவித்தார்.
அமிதாப் சௌத்ரி மேலும் கூறுகையில், வங்கித் துறை உட்படப் பல துறைகள் அதிகப்படியான சவால்களைச் சந்திக்கின்றன என கூறினார். சில தொழில் பிரிவுகள் வளர்ச்சியையும் வெற்றியையும் அடைவதற்குச் சிறந்த சூழலை தற்போதைய பொருளாதாரத்தில் பெற்று இருந்தாலும், சில துறைகள் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதேபோல் அக்சிஸ் வங்கி இந்த அப்ரைசல் சைக்கிள் முடிந்த பின்பு புதிய நிதியாண்டின் வளர்ச்சிக்கு முக்கியமான சில பிரிவில் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்வதற்குத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வளர்ச்சி பாதையில் ஒவ்வொரு ஊழியரின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட்டு அவ்வப்போது முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications