சிட்டி வங்கியின் சில்லறை வணிகத்தை, ஆக்சிஸ் வங்கி பிப்ரவரி 28 அன்று தன் வசப்படுத்தியுள்ளது. மார்ச் 1 முதல் சிட்டி வங்கியின் சில்லறை வணிகங்கள் அனைத்தும் ஆக்சிஸ் வங்கியின் இடம்பெயரும்.
சிட்டி வங்கியின் சில்லறை வணிகத்தில் வீடு மற்றும் தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள், காப்பீடு மற்றும் சில்லறை வணிகங்கள் அனைத்தும் அடங்கும்.
சிட்டி வங்கி!
சிட்டி வங்கி அதன் முதல் வங்கியை 1812 நியூயார்க் நகரத்தில், ஃபர்ஸ்ட் நேசனல் சிட்டி என்ற பெயரில் வங்கியை தொடங்கியது, அதன்பின் ATM உட்பட பல்வேறு வங்கி முன்னேற்றங்களில் சிட்டி வங்கி முன்னோடியாக இருந்தது.
119 ஆண்டு வர்த்தகம்
சிட்டி வங்கி இந்தியாவில், 1902 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அதன் முதல் கிளையை திறந்தது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்ட வங்கியாகவும் சிட்டி வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் மிகப்பழமையான வெளிநாட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களில் சிட்டி வங்கியும் ஒன்றாகும்.
13 நாடுகள்
ஏப்ரல் 2021 இல் சிட்டி குழுமம், இந்தியா உட்பட 13 நாடுகளில் உள்ள அதன் சில்லறை வங்கிச் செயல்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதன் வாயிலாக சிட்டி வங்கியின் சில்லறை வணிகத்தை ஆக்சிஸ் வங்கி கைப்பற்றியது.
ஆக்சிஸ் வங்கி
கடந்த மாதமே சிட்டி வங்கியை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தும் என தகவல்கள் வெளியாகி வந்தன. அதனைத் தொடர்ந்து அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கியின் சில்லறை வணிகத்தை மொத்தமாகக் கைப்பற்றி, அனைத்து வாடிக்கையாளர், வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளது.
சிசிஐ அமைப்பு
சிட்டி வங்கியின் சில்லறை வணிகத்தை ஆக்சிஸ் வங்கி வாங்கியதை Competition Commission of India (CCI) அதிகாரப்பூர்வமாக ஜூலை 2022ல் ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலையடுத்து, சிட்டி வங்கியின் சில்லறை வணிக வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள்.
வர்த்தக கைமாற்றம்
சிட்டி வங்கியின் சில்லறை வணிகத்தை ஆக்சிஸ் வங்கி சுமார் 12,325 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இந்த விற்பனை கீழ் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு பிஸ்னஸ், வீடு மற்றும் தனிநபர் கடன் வர்த்தகம், ரீடைல் பேங்கிங் மற்றும் காப்பீட்டு விநியோகம் ஆகியவற்றை முழுமையாகப் பெற உள்ளது. இந்த பிரிவுகளில் இனி சிட்டி பேங்க் செயல்படாது.
21 கிளைகள்
இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து, ஆக்சிஸ் வங்கி, இந்தியாவில் 18 நகரங்களில் உள்ள சிட்டி வங்கியின் 21 கிளைகள், 499 ATM கள் மற்றும் 30 லட்சம் வாடிக்கையாளர்களைத் தன்வசம் கொண்டிருக்கும்.
சிட்டி வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்!
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிட்டி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சேவைகளான சிட்டி வங்கியின் தயாரிப்புகள், சேவைகள், ஏடிஎம், இண்டர்நெட் பேங்கிங், சிட்டி மொபைல் செயலியை வழக்கம்போல பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
சேவையில் மாற்றம் இருக்காது
மேலும் ஆக்சிஸ் வங்கியின் உரிமத்தின் கீழ் இனி சிட்டி வாடிக்கையாளர்கள் அவர்களின் சேவைகள் மற்றும் பிற பயன்பாடுகளைச் சிட்டி வங்கியின் பெயரிலேயே பெறுவீர்கள் எனவும் சிட்டி வங்கி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
ஏடிஎம் பயன்பாடு
அதேபோல சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்களிலும் சென்று பணம் எடுக்கலாம் எனவும், மேலும் ஏடிஎம் பயன்பாடுகளுக்கான இலவச பரிவர்த்தனை நடைமுறைகள் அனைத்தும் ஆக்சிஸ் ஏடிஎம்களிலும் செல்லும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் சிட்டி வங்கி ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளுக்கு தற்போது விதிக்கப்படும் கட்டணங்கள் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்களுக்கு செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications