சிட்டி வங்கியை வெற்றிகரமாக கையகப்படுத்திய ஆக்ஸிஸ் வங்கி.. வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது?

இந்தியாவின் பிரபலமான தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கியின் இந்திய நுகர்வோர் வணிகம் மற்றும் வங்கி அல்லாத நிதி வணிகத்தினை வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து மார்ச் 2022லியே அறிவித்தது. நிதி சேவை குறித்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது 1.41 பில்லியன் டாலராகும். (இதன் இந்திய மதிப்பு 11,630 கோடி ரூபாயாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருந்தாலும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகளின் செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவானதாக உள்ள நிலையில், அந்த இடைவெளியினை இந்த கையகப்படுத்தல் நிரப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆக்ஸிஸ் வங்கி - சிட்சி வங்கி வணிகம்

ஆக்ஸிஸ் வங்கி - சிட்சி வங்கி வணிகம்

இந்த கையகப்படுத்தலின் மத்தியில் இன்று முதல் (மார்ச் 1 , 2023) சிட்டி வங்கியில் வீட்டுக் கடன், தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன், இன்சூரன்ஸ் வணிகம் என அனைத்தும் ஆக்ஸிஸ் வங்கியின் கீழ் வந்துள்ளது. இதன் மூலம் ஆக்ஸிஸ் வங்கியின் செயல்பாடுகள் விரிவடையலாம். வளர்ச்சியும் விரிவடையலாம்.

1 வருடம் முன்பு அறிவிப்பு

1 வருடம் முன்பு அறிவிப்பு

கடந்த மார்ச் 2022ல் அறிவிக்கப்பட்ட இந்த கையகப்படுத்தல் குறித்த அறிவிப்பு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு வந்தது. இந்த கையகப்படுத்தலின் மத்தியில் சிட்டி வங்கி அதன் கொல்கத்தாவின் முக்கிய கிளையில் இருந்த போர்டினை அகற்றியுள்ளது. ஆக இதன் மூலம் வெற்றிகரமாக சிட்டி வங்கியின் இந்திய வணிகத்தினை ஆக்ஸிஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது.

13 நாடுகளில் இருந்து வெளியேற திட்டம்

13 நாடுகளில் இருந்து வெளியேற திட்டம்

கடந்த 1902ம் ஆண்டில் இந்தியாவில் தனது வணிகத்தினை தொடங்கிய சிட்டி குழுமம், கடந்த ஆண்டு 13 சர்வதேச நாடுகளில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

இது குறித்தான ஒப்பந்தத்தில் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் பாதுகாப்பற்ற மற்றும் பாதுகாப்பான கடன் இலாக்காக்கள், செல்வ மேலாண்மை மற்றும் சில்லறை வங்கி வணிகம் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் சிட்டி கார்ப் பைனான்ஸ் இந்தியா லிமிடெட்-ம் அடங்கும்.

ஊழியர்களின் நிலை

ஊழியர்களின் நிலை

இந்த கையகப்படுத்தலின் மூலம் சிட்டி வங்கியின் 3600 ஊழியர்களும் ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்றுவதும் அடங்கும். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு ஒதுக்கப்பட்ட 800 மில்லியன் டாலர் பங்குகளை சிட்டி குழுமம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வங்கிகளின் பரிவர்த்தனையானது 2023ம் ஆண்டின் முதல் பாதியில் முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பினை போலவே தற்போது வெற்றிகரமான இந்த கையகப்படுத்தல் முடிவடைந்துள்ளது.

பாதிப்பு இருக்காது

பாதிப்பு இருக்காது


இந்த கையகப்படுத்தலினால் இந்தியாவில் உள்ள சிட்டி வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.
சிட்டி வங்கியானது 13 நாடுகளில் இருந்து அதன் சில்லறை வணிகத்தில் இருந்து வெளியேறி, அதன் அதிக லாபம் தரும் நிறுவன மற்றும் சொத்து மேலாண்மை வணிகங்களில் கவனம் செலுத்தும். இதன் மூலம் நிறுவனத்தினை மறுசீரமைக்கப்படும் என்றும் அதன் தலைமை செயல் அதிகாரி ஜேன் ஃப்ரோசரின் கூறியிருந்த நிலையில், இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்தியாவில் அதன் நிலை?

இந்தியாவில் அதன் நிலை?

சிட்டி குழுமம் இந்தியாவில் 21 கிளைகளைக் கொண்டிருந்தது. இவ்வங்கியின் நுகர்வோர் வங்கி வணிகத்தில் 3600 பேர் பணியாற்றியும் வந்தனர். சிட்டி குழுமம் இந்தியாவில் 1902ல் இந்தியாவில் நுழைந்தது. எனினும் 1985ல் நுகர்வோர் வங்கி வணிகத்தினையும் தொடங்கியது. 7 அலுவலகங்களையும், 21 கிளைகளையும், 18 நகரங்களில் 499 ஏடிஎம் மையங்களையும் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+