இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தற்போதைய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி-யின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது இவ்வங்கி.
அமிதாப் சௌத்ரி-யின் பதவிக்கால நீட்டிப்பு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு தேவை என்பதால், ஒப்புதல் கிடைத்த பின்னர், 2025 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை அவர் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றுவார். ஆர்பிஐ முடிவு வெளியாகும் வரையில் இந்த முடிவை ஆக்சிஸ் வங்கி செயல்படுத்த முடியாது, ஆனால் பெரும்பாலான

அமிதாப் சௌத்ரி, 2019 ஜனவரி 1 முதல் ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார், தற்போது இவருக்கு 59 வயதாகிறது. இப்பணிக்கு முன்பு, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்.
59 வயதான அமிதாப் சௌத்ரி பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், பிலானியில் இன்ஜினியரிங் பட்டமும், ஐ.ஐ.எம்., அகமதாபாத்தில் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.
ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக கூட்டத்தில், இவ்வங்கியின் இன்டிபென்டென்ட் டைரக்டராக மீனா கணேஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் பத்மநாபன் ஆகியோரின் பதவிக்கால நீட்டிப்பிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவர்களது பதவிக்கால நீட்டிப்பு வங்கி உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
ஆக்சிஸ் வங்கி மார்ச் காலாண்டில் கடன் வழங்குதல் மூலம் அதிகப்படியான வருவாய் காரணமாக இவ்வங்கியின் லாபத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட காலாண்டு முடிவில் ஆக்சிஸ் வங்கி ரூ.7,599 கோடி ஒருங்கிணைந்த லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி பங்குகள் 5 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், தொடர்ந்து 5 சதவீதற்கும் அதிகமான உயர்விலேயே இருந்தது. இதன் வாயிலாக இன்றைய வர்த்தக முடிவில் ஆக்சிஸ் வங்கி பங்குகள் 5.98 சதவீதம் உயர்வில் 1127.35 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications