தனியார் துறையினை சேர்ந்த முன்னணி வங்கியான ஆக்ஸிஸ் வங்கியானது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையிலான காலாண்டில் நிகர லாபம் 19% வீழ்ச்சி கண்டு, 1,112 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,370.08 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த வங்கியின் நிகர வட்டி வருவாயானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,985 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வட்டி அல்லாத வருவாய் 33 சதவீதம் வீழ்ச்சி கண்டு 2,587 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே செயல்பாட்டு லாபம் 1 சதவீதம் குறைந்து 5,844 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இதே இந்த வங்கியின் மொத்தம் செயல்படாத சொத்துக்களின் மதிப்பானது முதல் காலாண்டில் 4.72% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 53 BPS குறைவாகும்.
இதே நிகர வாராக்கடன் மதிப்பானது முதல் காலாண்டில் 1.23% ஆக உள்ளது. இது மார்ச் காலாண்டில் 1.56% ஆகவும் இருந்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே ஜூன் காலாண்டில் 2.04% ஆக இருந்துள்ளது.
இது குறித்து ஆக்ஸிஸ் வங்கியின் எம்டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் சவுத்ரி கூறுகையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயினால் நாடு முழுவதும் செய்யப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக, ஏற்பட்ட இடையூறுகள் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
எனினும் இதில் நடந்த நல்ல விஷயம் என்னவெனில், இந்த துறையில் நிறைய புதுமைகளை கொண்டு வந்துள்ளது. அதில் ஆக்ஸிஸ் வங்கியும் முன்னணியில் உள்ளது. அதன் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து வலுவாக நிறுவனத்தினை செயல்படுத்தும். மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்கள், பங்குதாரர்களை சவாலான கட்டத்தில் ஆதரிப்பதன் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இது பல முதன்மை விஷயங்களுக்கு வழி வகுத்துள்ளது.
மேலும் நாங்கள் பலவற்றை செயலில் கொண்டு வருவதற்காக செயல்பட்டு வருகிறோம். எங்கள் சேவைகள் வாடிக்கையாளர்களின் தொடு புள்ளிகளில் எதிரொலிக்கும். எங்களின் Dil Se Open -வுடன் எங்களின் பயணம் சிறப்பானதாக உள்ளது என்றும் அமிதாப் கூறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications