மும்பை: ஆக்ஸிஸ் பேங்க் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகரலாபம், 4.53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகரலாபம் 1,757 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,680.85 கோடி ரூபாயாக நிகரலாபம் கண்டிருந்தது. இதே ப்ளும்பெர்க் கணிப்பு படி 22 ஆய்வாளர்களுடன் நடத்திய கணிப்பின் படி 2,073.4 கோடி ரூபாய் நிகரலாபம் காணும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகரவட்டி வருமானம் அல்லது கடன்களின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி மற்றும் வைப்புத் தொகைக்கு செலுத்தப்பட்ட வித்தியாசம் ஆகிவற்றுக்கு இடையேயான வித்தியாசம் 15.16% அதிகரித்து 6,452.98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 5,603.67 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர முக்கிய கட்டணம் உள்ளிட்ட மற்ற வருமானம் 5.35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 3,786.57 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 4,000.69 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிசம்பர் காலாண்டில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு, 5% ஆக இருந்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 5.03% ஆக இருந்தது. எனினும் முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 5.75% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே டிசம்பர் காலாண்டில் புரவீசன்ஸ் 13.63% அதிகரித்து 3,470.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,054.51 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 3,518.39 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
ஒதுக்கீட்டிற்கு பிறகு, இதே நிகர வாராக்கடன் மதிப்பு 2.09% ஆகவும், இதுவே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1.99% ஆகவும், முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2.36% ஆகவும் இருந்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி லாபத்தில் தனது காலாண்டு அறிக்கையை சமர்பித்திருந்தாலும், அதன் பங்கின் விலையானது பிஎஸ்இயில் இன்று 1.08% வீழ்ச்சி கண்டு, 710 ரூபாயாக வீழ்ச்சி கண்டும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications