நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.6,918 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 18% அதிகமாகும். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.5,864 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) 9% அதிகரித்து ரூ. 13,483 கோடியாக இருந்தது. அதே சமயம் நிகர வட்டி வரம்பு (NIM) 3.99% ஆக நிலையானதாக உள்ளது. இந்த காலாண்டில், வங்கி அதன் செயல்பாட்டு லாபத்தில் 24% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது ரூ.10,712 கோடியாக உள்ளது.

வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமிதாப் சவுத்ரி கூறுகையில், இந்த காலாண்டில் ஆக்சிஸ் டிஜிட்டல் மற்றும் பிசிகல் விரிவாக்கத்திற்கும் இடையே சமநிலையை எட்டியுள்ளது என்றும், கடந்த மூன்று மாதங்களில் வங்கி 150 புதிய கிளைகளைத் திறந்துள்ளது என்று கூறியுள்ளார்.
வங்கியின் பிற வருமானங்களை பொருத்தவரை கட்டண வருமானம் 11% அதிகரித்து ரூ.5,508 கோடியாக உள்ளது. சில்லறை கார்டுகள் மற்றும் கட்டணங்கள் ஆண்டுக்கு 10% ஆகவும், காலாண்டில் 3% ஆகவும் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வர்த்தக வருமானம் காலாண்டில் ரூ. 1,111 கோடியாகவும், இதர வருமானம் ரூ.103 கோடியாகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக, வர்த்தகம் மற்றும் இதர வருமானம் உள்ளிட்ட வங்கியின் மொத்த வட்டி அல்லாத வருமானம் 34% அதிகரித்து ரூ.6,722 கோடியாக உள்ளது.
செப்டம்பர் 30, 2024 அன்று வங்கியின் இருப்புநிலை 12% வளர்ச்சியடைந்து ரூ. 15,05,658 கோடியாக இருந்தது. மொத்த வைப்புத்தொகை மாத இறுதி அடிப்படையில் 14% வளர்ச்சியடைந்துள்ளது. இதில் நடப்பு கணக்கு வைப்புத்தொகை ஆண்டுதோறும் 8% மற்றும் சேமிப்பு கணக்கு வைப்பு ஆண்டுக்கு 2% வளர்ச்சியடைந்தது.
மொத்த டெர்ம் டெபாசிட்டுகள் ஆண்டுக்கு 21% மற்றும் காலாண்டில் 4% அதிகரித்துள்ளது. இதில் மொத்த வைப்புகளில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புகளின் பங்கு 41% ஆக இருந்தது. காலாண்டு சராசரி இருப்பு (QAB)மொத்த வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு 14% மற்றும் காலாண்டில் 1% வளர்ந்துள்ளன. அதேபோல், சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகை 1% ஆண்டுக்கும், நடப்புக் கணக்கு வைப்புத்தொகை 13% ஆண்டுக்கும் வளர்ந்துள்ளன.
செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி வங்கியின் முன்பணங்கள் ஆண்டுக்கு 11% மற்றும் காலாண்டிற்கு 2% உயர்ந்து ரூ.9,99,979 கோடியாக உள்ளன. அதேபோல், சில்லறை கடன்கள் 15% ஆண்டுக்கு மற்றும் 2% காலாண்டில் உயர்ந்து ரூ. 5,98,715 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர முன்பணங்களில் 60% ஆகும்.
செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி, மொத்த வராக்கடன்கள் அளவு 1.44% ஆகவும், நிகர வராக்கடன் அளவு 0.34% ஆகவும் உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஜூன் 30 2024 இருந்த மொத்த வராக்கடன் 1.54% மற்றும் நிகர வராக்கடன் 0.34% ஐ விட குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
காலாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து பெறப்பட்ட தொகை ரூ.984 கோடி ஆகவும், தள்ளுபடி செய்யப்பட்ட தொகையிலிருந்து சரிசெய்யப்பட்ட தொகையானது காலாண்டில் ரூ.1,390 கோடியாக பதிவாகியுள்ளதாகவும், இதில் சில்லறை விற்பனை ரூ.2,164 கோடியாகவும் வந்துள்ளது. மொத்த வாராக்கடன்களின் விகிதத்தில் வங்கியின் ஒதுக்கீடு கவரேஜ் 77% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் 79% மற்றும் ஜூன் காலாண்டில் 78% ஆக இருந்தது.
காலாண்டில் 150 கிளைகளை வங்கி தொடங்கியுள்ளது. அதன் ஒட்டுமொத்தமாக 5,577 உள்நாட்டு கிளைகள், விரிவாக்கம் செய்யப்பட்ட கவுண்டர்களுடன் 182 வணிக நிருபர் வங்கி விற்பனை நிலையங்களுக்கு (BCBOs) சேர்த்துள்ளது. இது 5,152 உள்நாட்டு கிளைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட கவுண்டர்களுடன் ஒப்பிடும்போது 3,062 மையங்களில் அமைந்துள்ளது. மேலும் செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி 2,864 மையங்களில் 156 BCBOக்கள் உள்ளன.
இதற்கிடையில், இன்று ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் ரூ.1,131.85 இல் முடிவடைந்தது, ரூ.21.36 சரிவை பதிவு செய்தது. இந்த பங்குக்கு 10க்கு 8 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. 40 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களால் பங்கு வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. அதன் சாத்தியமான லாபம் 21.52% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 1 ஆண்டு இலக்கு விலை ரூ.1,375 ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications