ஆக்ஸிஸ் வங்கி தூள்.. ரூ.5853 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு சான்ஸ் கிடைக்குமா?

தனியார் துறையை சேர்ந்த வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கடந்த ஆண்டினை காட்டிலும், அதன் நிகரலாபம் 62% அதிகரித்து, 5853 கோடி ரூபாயாக லாபம் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 3614 கோடி ரூபாயாக இருந்தது.

இதே நிகர வட்டி வருவாய் ஆனது 32 சதவீதம் அதிகரித்து, 11,459 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே நிகர வட்டி மார்ஜின் விகிதாமனது 4.26 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 73 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டினை காட்டிலும் 30 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

கட்டண வருமானம்

கட்டண வருமானம்

ஆக்ஸிஸ் வங்கியின் கட்டண வருமான விகிதமானது இந்த காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 23 சதவீதம் அதிகரித்து, 4101 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சில்லறை கட்டண விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும், 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே வங்கியின் மொத்த கட்டண வருவாய் வீதமானது, 69 சதவீதம் அதிகரித்துள்ளது.

ட்ரேடிங் கட்டணம்

ட்ரேடிங் கட்டணம்

சில்லறை அசெட்கள் (கார்டுகள் மற்றும் பேமெண்டுகள் தவிர ) மீதான கட்டணம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே ட்ரேடிங் கட்டணம் 17% அதிகரித்து, 428 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே வட்டி அல்லாத வருமானம் 21 சதவீதம் அதிகரித்து, 4,665 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

புரவீசன்ஸ்

புரவீசன்ஸ்

புரவீசன்ஸ் விகிதமானது 1438 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கியின் மொத்த வாரக்கடன் விகிதமானது 2.38% ஆக உள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 2.5% ஆகவும் இருந்தது. இதே நிகர வாராக்கடன் விகிதமானது 0.47 சதவீதமாகவும், இது முன்னதாக 0.51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

ஆப் மூலம் வளர்ச்சி

ஆப் மூலம் வளர்ச்சி

இவ்வங்கியின் மொபைல் ஆப் மூலமாக வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இதன் மாத ஆக்டிவ் பயனர்கள் 1.1 கோடியாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் 68 லட்சம் பேரும், இதே ஆக்ஸிஸ் மொபைல் மற்றும் ஆக்ஸிஸ் பே ஆப்பினையும் பயன்படுத்துகின்றனர்.

கடன் வளர்ச்சி

கடன் வளர்ச்சி

கிரெடிட் கார்ட் அட்வான்ஸ் வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும், 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே தனி நபர் கடன் விகிதமானது 21 சதவீதம் அதிகரித்தும் உள்ளது. இதே நடுத்தர கார்ப்பரேட் கடன் வளர்ச்சியானது, 42 சதவீதம் அதிகரித்தும், இதே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு-கான கடன் வளர்ச்சி+ SBB + MC கடன் வளர்ச்சியானது 1,53,652 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

தொடர்ந்து வாராக்கடன் விகிதம் சரிந்து வரும் நிலையில், மறுபுறம் கடன் வளர்ச்சியானது அதிகரித்து வருகின்றது. இதன் டிஜிட்டல் வளர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு இவ்வங்கியின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் இன்று ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலையானது 2.15 ரூபாய் அதிகரித்து, 932.70 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இதே பி.எஸ்.இ-யில் 933.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், வலுவான லாபத்தினை கண்டுள்ளது. இது இனி வரவிருக்கும் காலாண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட்டி வருவாய் அதிகரித்து, வாரக்கடன் குறைந்துள்ளது சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+