மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கூடுதலாக 29% பங்குகளை வாங்குவதற்கு ஆக்ஸிஸ் பேங்க் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், ஆக்ஸிஸ் வங்கி மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 29% பங்குகள், அதாவது 55.64 கோடி பங்குகளை மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸிடமிருந்து வாங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தற்போது 72.5 சதவீத பங்குகளை மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் வைத்துள்ளது. ஆக்ஸிஸ் பேங்கும் கூட ஏற்கனவே கொஞ்சம் பங்கினை வைத்திருந்த நிலையில் தற்போது மேற்கொண்டு பங்கினை அதிகரித்துள்ளது.
தனியார் வங்கித் துறையில் மூன்றாவதாக இருக்கும் ஆக்ஸிஸ் வங்கி, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நான்காவது இடத்தினை பிடித்துள்ளது. இந்த நிலையில் ஆக்ஸிஸ் மேற்கொண்டு தனது பங்கு விகிதத்தினை மேக்ஸ் லைஃபில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் 19,987 கோடி ரூபாய் வரவு செலவு செய்த ஒரு நிறுவனமாகும்.இந்த நிலையில் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, ஆறு முதல் ஒன்பது மாதங்களில் இந்த பரிவர்த்தனை முடியும் என்றும் ஆக்ஸிஸ் வங்கி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஆக்ஸிஸ் வங்கியும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வணிக உறவினைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு இது 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த உறவின் மூலம் உருவாக்கப்பட்ட மொத்த பிரீமியம் 38,000 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் ஒர் அறிக்கை கூறுகிறது.
இது குறித்து மேக்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான அனல்ஜித் சிங் ஆக்ஸிஸ் வங்கியை நான் நம்புகிறேன். நாங்கள் எங்களுக்கு ஏற்றவாறு ஒரு கூட்டாளரை கண்டுபிடித்துள்ளோம். இது மேக்ஸ் லைஃப் அடிப்படையில் மிக வலுவானதாகவும், சிறந்த செயல்திறனாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஸ்திரத்தன்மையும் தரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இதற்கிடையில் இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலையானது 35% ஏற்றம் கண்டு 442 ரூபாயாக அதிகரித்து வர்த்தகம் ஆகியது
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications