சென்னை: சென்னை அடுத்த மாபெரும் டெக் நகரமாக உருவெடுத்து வருகிறது. அதிரடியான திட்டங்களும், அறிவிப்புகளும், விரிவாக்கமும் இல்லாமல், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, முக்கியமான கொள்கையைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது மூலம் சென்னை அடுத்த சில வருடத்தில் பின்டெக் சிட்டி அல்லது ஸ்டார்ட்அப் நகரமாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் அக்ஸிஸ் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிடெட் (Axis AMC) மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர் டிஷ்மன் ஸ்பையர் இணைந்து உருவாக்கிய அக்ஸிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட், சென்னையின் ஃபின்டெக் சிட்டியில் 1.5 ஏக்கர் நிலத்தை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்த பின்டெக் சிட்டில் நந்தம்பாக்கத்தில் உள்ளது.

இந்த நிலத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏ-கிரேடு அலுவலக கட்டிடம் கட்டப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் டிஷ்மன் ஸ்பையர் நிறுவனம் வடிவமைப்பு, மேம்பாடு, குத்தகை மற்றும் சொத்து மேலாண்மையை மேற்பார்வையிடும். சென்னையில் அதிகரித்து வரும் ஜிசிசி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை கருத்தில் கொண்டு இந்த முதலீட்டை அக்ஸிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் செய்ய உள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகத்தால் (TIDCO) நடத்தப்பட்ட ஏலத்தில் இந்த நிலம் வாங்கப்பட்டது என்று அக்ஸிஸ் AMC தெரிவித்துள்ளது. சென்னை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது, அதில் BFSI பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர்களும் அடங்குவர்.
இது அக்ஸிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்டின் முதல் முதலீடு இதுதான், இந்த நிதி ஜூன் 2024 இல் சுமார் ரூ.550 கோடி நிதி திரட்டலை முடித்து நீண்ட கால வளர்ச்சிக்கான ஆதாரமாகச் சென்னையில் முதலீடு செய்துள்ளது. அக்ஸிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது, இந்த கூட்டணி இநதியாவில் 8 பெரு நகரங்களில் ஆரம்பக்கட்ட அல்லது கிரீன் ப்லீட் கமர்சியல் ரியல் எஸ்டேட் திட்டங்களை அமைப்பது தான். அக்ஸிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்டின் என்பது ஒரு அல்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (AIF).
அல்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் என்றால் என்ன..?
அல்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் என்பது தனியார் முதலீட்டு ப்ரேம்வொர்க் ஆகும். இது இந்திய அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியை கொண்டு, பங்கு அல்லது வென்சர் கேப்பிடல், ஹெட்ஜ் ஃபண்ட்கள், ரியல் எஸ்டேட், சரக்கு பொருட்கள் மற்றும் டெரவேட்டிவ்ஸ் போன்ற மாற்று சொத்து பிரிவில் முதலீடு செய்கிறது.


Click it and Unblock the Notifications