ஈரானில் உச்சகட்ட பதற்றம்: கமேனி படுகொலை அடுத்து இடைக்கால ஆட்சியாளர் நியமனம்!!

ஈரான் தலைவராக செயல்பட்டு வந்த மதகுரு அயதுல்லா அலி கமேனி அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவங்களின் கூட்டு நடவடிக்கையால் கொல்லப்பட்டதை அடுத்து புதிய இடைக்கால ஆட்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் நாட்டின் இடைக்கால ஆட்சியாளராக அயத்துல்லா அராபி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஈரான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஈரான் கைவசம் அணு ஆயுதங்கள் இருப்பது உலகிற்கே ஆபத்தானது எனக் கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் தான் திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தன.

ஈரானில் உச்சகட்ட பதற்றம்: கமேனி படுகொலை அடுத்து இடைக்கால ஆட்சியாளர் நியமனம்!!

பல்வேறு நகரங்களிலும் இருநாட்டு ராணுவங்களும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்த தாக்குதலில் ஈரான் தலைவர் மற்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கான மதகுருவாக செயல்பட்டு வந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் முழுவதுமே இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அமெரிக்காவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். ஈராக், பாகிஸ்தான் நாடுகளில் அமெரிக்க தூதரக சூறையாடப்பட்டுள்ளது. இதோடு ஈரான் மீதான தாக்குதல் முடிந்துவிடவில்லை தங்களுடைய தலைவர் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது மறுபுறம் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை சந்திப்பீர்கள் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதற்கிடையே ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேலும் அறிவித்திருக்கிறது.

இப்படி ஈரான் போரில் ஒவ்வொரு நொடியும் பதற்றம் கூடிக் கொண்டே போகிறது. இதற்கிடையே ஈரான் நாட்டு அரசாங்கம் தலைவர் கமேனியின் மரணத்தை அடுத்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்றும் 7 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஈரான் அரசியலமைப்பு சட்டத்தின்படி புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை அயதுல்லா அரேசா அராபி இடைக்கால தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவரது தலைமையிலான கவுன்சில் சவாலான சூழலுக்கு மத்தியில் நாட்டை வழி நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் அதிபர் , தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக ஈரான் அரசு எப்படி செயல்பட போகிறது என்பதை முடிவெடுக்கக்கூடிய ஒரு கவுன்சிலாக இந்த கவுன்சில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அயதுல்லா அராபியை பொறுத்தவரை அவருடைய தந்தை ஷேக் ஹாஜி இதற்கு முன்பு ஈரானின் மதத்தலைவராக இருந்த கொமேனியின் நெருங்கிய வட்டங்களில் இருந்தவர். சிறு வயது முதலே ஈரான் புரட்சி படையில் இடம்பெற்றிருந்தவர் என சொல்லப்படுகிறது. தற்போது அவருக்கு நாட்டையே வழிநடத்தும் உயர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+