வட இந்தியாவின் புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்னதாக தடல்புடல் ஏற்பாடுகளை எப்எம்சிஜி நிறுவனங்கள் செய்து வருகின்றன. அயோத்தியில் 22 ஆம் தேதி முதல் மக்கள் அலைமோத துவங்குவார்கள், இதன் மூலம் அயோத்தி FMCG நிறுவனங்களுக்கு பொக்கிஷமாக மாறப்போகிறது.
பேக்கேஜ்டு உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பாளர்கள் அயோத்தியில் தங்கள் தயாரிப்புகளின் விநியோகத்தை அதிகரித்து வருகின்றனர். அதே போல் விளம்பர பிரசாரங்களையும் முனைப்பாகச் செயல்படுத்துகின்றனர்.

Bisleri: பாட்டில் குடிநீர் பிராண்ட் பிஸ்லேரி நகரத்துக்கு செல்லும் அனைத்து சாலை வழிகளிலும் அயோத்தியில் உள்ள முக்கிய நுகர்வு மையங்களிலும் விநியோகத்தை அதிகரித்து வருகிறது. அயோத்தியில் பிஸ்லேரி நிறுவனம் அடுத்த சில மாதங்களில் ஒரு புதிய ஆலையை நிறுவுகிறது.
முனிசிபல் அதிகாரிகளுடன் இணைந்து பயன்படுத்திய பிளாஸ்டிக்கை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அயோத்தியில் ஒரு புதிய ஆலை வரவிருக்கிறது, அது சில மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்று பிஸ்லேரி இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி ஏஞ்சலோ ஜார்ஜ் கூறினார்.
Ram Temple: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஏழு நாள் 'பிரான் பிரதிஷ்டை' மத சடங்குகள் ஜனவரி 16 அன்று தொடங்கி ஜனவரி 22 வரை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் கோயிலை திறந்து வைக்கிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தினசரி லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதால் அயோத்தியில் புதிய விமான நிலையம், சீரமைக்கப்பட்ட புதிய ரயில்நிலையம், அகலமான சாலைகள் மூலம் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதைக் கண்ட நிறுவனங்கள், நகரத்தில் பெரிய மதச் சுற்றுலாவை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளன.
பேக்கேஜ் உணவு பொருட்களின் தயாரிப்பாளர்கள் புதிய தயாரிப்புகளை சாம்பிள் செய்வதற்கும், ஏற்கனவே உள்ள பிராண்டுகளுக்கான சோதனைகளை உருவாக்குவதற்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
Parle நிறுவனம்: பேக்கேஜ் உணவு தயாரிப்பு நிறுவனமான பார்லே ப்ராடக்ட்ஸ், அயோத்தியில் பிஸ்கட்கள், தின்பண்டங்கள், ஸ்நாக்ஸ் போன்றவற்றின் விநியோகத்தை கணிசமாக அதிகரித்துள்ளோம். அயோத்தியில் மட்டுமல்ல, அருகிலுள்ள நகரங்களிலும் கூட அதிகரித்துள்ளோம், இதன் மூலம் சப்ளை டிமாண்ட் பிரச்சனை தீர்க்கப்படும் என்று பார்லே தயாரிப்புகளின் மூத்த பிரிவின் தலைவர் கிருஷ்ணாராவ் புத்தர் கூறினார்.
கிருஷ்ணாராவ் புத்தர் அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்வை கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுள்ளார். இது இந்தியாவில் காணப்பட்ட மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
Dabur நிறுவனம்: உள்நாட்டில் வேகமாக விற்கும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான டாபர் இந்தியா, தினசரி அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது. இந்த வகையில், அயோத்தி நகரத்தில் அதன் தயாரிப்புகளின் விநியோகத்தை அதிகரித்து வருகிறது.
டாபர் இந்தியா நிறுவனம் ரியல் ஜூஸ்கள், டாபர் ஆம்லா ஹேர் ஆயில், டாபர் வேதிக் டீ போன்ற பிராண்டுகளுக்காக நகரத்தில் அனுபவ மண்டலங்களை அமைப்பது போன்ற சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளிலும் முதலீடு செய்து வருகிறது என்று டாபர் இந்தியா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா கூறினார்.
அயோத்தி வரை செல்லும் லக்னோ, கோரக்பூர் மற்றும் வாரணாசி நெடுஞ்சாலைகளில் தாபாக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன. டாபர் இந்த தாபாக்களை ஹாஜ்மோலா, ரியல் போன்ற முக்கிய பிராண்டுகளுடன் நிறைக்கிறது என்று டாபர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Coca-Cola நிறுவனம்: கோகோ கோலா உத்தரப் பிரதேசத்தில் அதன் பாட்டில் விநியோகிப்பாளர்கள் அப்பகுதியில் விற்பனை இயந்திரங்கள் கிடைப்பதை அதிகரித்து, அதன் குறைந்த யூனிட் பேக்குகளை சேமித்து வைக்க சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
சில்லறை விற்பனையாளர்களுக்கு 24X7 சேவையை உறுதிசெய்ய கூடுதல் உள்கட்டமைப்பு ஆதரவுடன் கிட்டத்தட்ட 50 விற்பனை இயந்திரங்கள் நகரத்தில் வைக்கப்பட்டுள்ளன. மலிவு விலையில் ₹10 மற்றும் ₹20 கோகோ கோலா பானங்கள் கிடைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று கோகோ கோலா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மளிகை கடைகள்: நகரத்தில் உள்ள பலசரக்குக் கடைகள் பருத்தி திரிகள், நெய் மற்றும் எண்ணெய், தீபங்கள் கற்பூரம், அரிசி, கோதுமை, தேன் உள்ளிட்ட பூஜை சாமான்களை சேமித்து வைக்கின்றன. பலசரக்கு கடை உரிமையாளர்களும் பேக் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகளை சேமித்து வைத்துள்ளனர்.
பலசரக்குக் கடை உரிமையாளர்களின் ஆய்வின்படி, அயோத்தியில் உள்ள பலசரக்குக் கடைகளில் அதிகமாக கையிருப்பில் உள்ளது. இதை தொடர்ந்து மக்களுக்கு அதிகப்படியான தேவைகள் இருக்கும் சிப்ஸ், நம்கீன்ஸ், சாக்லேட் போன்றவற்றையும் அதிகப்படியான இருப்பு வைத்துள்ளனர்.
குளிர் பானங்கள், தண்ணீர் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களான கூந்தல் எண்ணெய், சோப்புகள் ஆகியவை நகரத்தில் உள்ள உள்ளூர் கடைகளிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்: ரிலையன்ஸ் ரீடெய்லின் வேகமாக நகரும் நுகர்வோர் தயாரிப்புகளான ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள், உத்தரப் பிரதேச சந்தையில் விரிவாக விற்பதற்காக அதன் பிராண்டுகளான இன்டிபென்டன்ஸ் பாட்டில் வாட்டர், கேம்பா ஃபிஸி பானங்கள் மற்றும் ஸ்நாக்கிங் பிராண்டான ஆலன்ஸ் பகில்ஸ் போன்றவற்றை விநியோகம் செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications