அயோத்தி: ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ள அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த பகுதி ஆன்மீக சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அயோத்தி மாவட்ட நிர்வாகம் நிலங்களுக்கான அரசின் மதிப்பீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ராமர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நிலங்களின் சர்க்கிள் விகிதத்தை 200% வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
சர்க்கிள் விகிதங்கள் என்பது கலெக்டர் விகிதங்கள் என்றும் அறியப்படுகின்றது. அதாவது மாநில அரசாங்கம் சொத்து மதிப்புகளை தீர்மானம் செய்வதற்கான ஒரு அளவுகோலாக இந்த சர்க்கிள் விகிதங்களை பயன்படுத்திருக்கின்றன. இதனை நிலத்தின் மீதான அரசின் மதிப்பீடு என்றும் கூறலாம்.

இந்த விகிதங்களின் அடிப்படையில் தான் சொத்து பரிவர்த்தனைகளுக்கான முத்திரை வரி கணக்கிடப்படுகிறது. விற்பனை பத்திரத்தில் ஒரு சொத்தின் அறிவிக்கப்பட்ட மதிப்பு குறைவாக இருந்தாலும் பதிவாளர்கள் சர்க்கிள் விகிதங்களின் அடிப்படையில் மட்டுமே கட்டணத்தை கணக்கிட வேண்டும்.
அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதனை அடுத்து கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தான் அயோத்தி சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கான சர்க்கிள் விகிதங்களை உயர்த்த மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அயோதியில் தற்போது இருக்கும் சந்தை விலையையும் அரசு வரி வசூலிக்கும் விலையையும் ஒப்பிடும்போது மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உதாரணமாக ராமர் கோயிலுக்கு அருகில் இருக்கும் இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் இருக்கும் நிலங்கள் சர்க்கிள் விகிதங்களை விட 1,235% அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்த பகுதிகளில் இருக்கும் நிலங்களின் சர்க்கிள் விகிதத்தை 200% உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவு முன் வடிவு தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் பொது மக்களின் கருத்து கேட்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான தங்களுடைய ஆட்சேபனைகளை பொதுமக்கள் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு அதன் அடிப்படையில் புதிய மதிப்பீடு விகிதங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்டுமான பணிக்கு முன்னரே மதிப்பீடுகளை உயர்த்த திட்டமிடப்பட்டு அது கைவிடப்பட்டது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர் நிலத்தின் மதிப்பீடுகள் உயர்த்தப்பட உள்ளன.
இதனிடையே அயோத்தியாவில் நிலத்தின் மதிப்பீடுகளை உயர்த்துவதற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கியவர்கள் எல்லாம் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் காணப் போகிறார்கள். எனவே பாஜகவினருக்கு சாதகமாகவே இப்படி ஒரு முடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications