அயோத்தியில் மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா என்ற புதிய மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா அடுத்த ஆண்டு நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த விழாவுக்கு இஸ்லாமிய மதகுருக்கள், ஹாஜிமார்கள், இமாம்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் மசூதி கட்டுமானத் திட்டத்துடன் தொடர்புடையவர்கள் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தனர்.
மசூதி கட்டுமானப் பொறுப்பு இந்திய இஸ்லாமிய கலாசார பவுண்டேஷன் (The Indo-Islamic Cultural Foundation- IICF) வசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அயோத்தி மசூதி மேம்பாட்டு கமிட்டியின் தலைவர் ஹாஜி அர்பாத் ஷேக் கூறுகையில், அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் மசூதி கட்டி முடிக்கப்படும். கட்டுமானம் முடிந்து மசூதி திறக்கத் தயாரானவுடன் மெக்கா மசூதியில் தொழுகைக்கு தலைமை வகிக்கும் இமாம்-இ-ஹரம் உள்பட அனைத்து நாடுகளையும் சேர்ந்த தலைமை மதகுருமார்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இதுபற்றி பாஜக தலைவரும், மகாராஷ்டிர மாநில மைனாரிட்டி கமிஷனின் முன்னாள் தலைவருமான ஷாயிக் கூறுகையில் இந்த மசூதி தாஜ்மகாலைவிட அழகாக அமைக்கப்படும். நாடு முழுவதும் உள்ள மதகுருக்கள், புனிதத் துறவிகளுக்கு அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருக்கும் அடிக்கல் நாட்டுவிழாவுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
நபிகள் நாயகத்தின் பெயரால் அமைக்கப்படும் மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா, அயோத்தியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தன்னிப்பூரில் கட்டப்படும்.
அதற்கான நிலத்தை அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இஸ்லாமியர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு வழங்குகிறது.
மசூதி தவிர, அங்கு பல் மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர் மற்றும் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கொண்ட கல்லூரிகளும் அமைக்கப்படும்.
இத்துடன் புற்றுநோய் சிகிச்சைக்கானது உள்பட இரண்டு மருத்துவமனைகளும் கட்டப்படும். மசூதி வளாகத்தில் அனைத்து மத நம்பிக்கை உள்ளவர்களுக்கும் ஏற்றவிதமாக வெஜிடேரியன் கம்யூனிட்டி சென்டரும் அமைக்கப்படும் என்று ஷாயிக் கூறினார்.
இந்திய இஸ்லாமிய கலாசார பவுண்டேஷனின் தலைவரும் தலைமை அறங்காவலருமான உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ப் வாரியத்தின் தலைவருமான ஜுபர் அகமது பரூக்கி கூறுகையில், மசூதிக்கான அடிக்கல் நாட்டுவிழா அடுத்த ஆண்டு நடைபெறும் என நம்புகிறோம். அந்த விழாவுக்கு நாடுமுழுவதிலும் இருந்து மதகுருமார்கள் அழைக்கப்படுவர் என்றார்.
மசூதி கட்டப்பட்டு முடிந்தவுடன் உலகெங்கிலும் உள்ள பிரமுகர்களுக்கு அழைப்பு விடுப்போம் என்றும் அவர் கூறினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications