அயோத்தி கோவிலில் உள்ள ராம் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டா விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெற்றிகரமாக நடந்தது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பிரபலங்கள் கூட்டமும் ஒன்று கூடினர். இதைத் தொடர்ந்து முதல் நாளில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ராமரின் திருவுருவ சிலையைத் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் அயோத்தி ராமரின் 51 அங்குல சிலை குறித்து முக்கியமான தகவலை மத்திய அரசு அதிகாரி வெளியிட்டு உள்ளார். அயோத்தி ராமர் சிலை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட கல் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கருப்புக் கிரானைட் கல் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் சிலை செய்யப்பட்ட கல் 2.5 பில்லியன் ஆண்டுகள் அதாவது 250 கோடி ஆண்டுகள் பழமையானது என்று பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ராக் மெக்கானிக்ஸ் (NIRM) இயக்குநர் எச்.எஸ். வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இந்த கல்லின் வயதை இயற்பியல்-இயந்திரவியல் பகுப்பாய்வைப் பயன்படுத்திப் பரிசோதிப்பதில் NIRM ஈட்டுப்பட்டு உள்ளது.
அயோத்தி ராமர் சிலை செய்யப் பயன்படுத்திய கல் பெயர் கிருஷ்ண ஷிலா (Krishna Shila) கல். இக்கல்லின் கருப்பு நிற தோற்றத்திற்குப் பெயர் பெற்றது. இதேபோல் கல் எத்தனை ஆண்டுக் காலம் ஆனாலும் சிலை அரிக்காமல் கடினமான தன்மை கொண்டது.
உதாரணமாக தினமும் பால், தண்ணீர், எண்ணெய் ஊற்றும்போது சில கல் கெமிக்கல் ரியாக்ஷன் மூலம் அரிக்கும் தன்மை உருவாகும், ஆனால் இந்தக் கல் அத்தகைய பாதிப்பில் எதிர்வினையாற்றக் கூடியது. கிருஷ்ண ஷிலா கல் உண்மையில் நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் கொக்கோ பவுடரைப் பூசினால் கருப்பாக மாறும்.
ஆண்டுக்கு ஆண்டு இந்தக் கல் கெட்டியாகி, எவ்விதமான பாதிப்பையும் எந்த வானிலைக்கும் பாதிக்காத தன்மை கொண்டது. கிருஷ்ண ஷிலா கல் கொண்டு செய்யப்பட்ட பல சிலைகள் பல கோயில்களில் உள்ளது 5000 வருடத்திற்கு அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் சிலை கூட உள்ளது என அயோத்தி ராமர் சிலையை உருவாக்கிய சிற்பி யோகிராஜின் மனைவி விஜேதா கூறியுள்ளார்.
உயர்தரக் கிரானைட் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்ற மைசூரு மாவட்டத்தில் உள்ள ஜெயபுரா ஹோப்ளி கிராமத்தில் இருந்து ராம் லல்லா சிலைக்கான கல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரான் பிரதிஷ்டா விழாவுக்கு முன்பு இந்தக் கல்லுக்கு 400 கோடிக்கும் அதிகமான வயது இருக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது NIRM அமைப்பு தலைவர் உண்மையை விளக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications