ஒட்டுமொத்த இந்தியாவும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கிறது, ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்த விழாவை ஒட்டுமொத்த இந்தியாவும் காண வேண்டும் என்பதற்காக அனைத்துப் பொதுத்துறை வங்கிகள், மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பல மாநிலத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது, இதுதவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ராமர் கோயில் திறப்பு விழா-வை நேரலையில் காண மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது.

இதேவேளையில் இந்திய மக்கள் மத்தியில் அயோத்தி ராமர் கோயில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக நன்கொடை பெயரில் பலர் மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வரும் வேளையில், இந்த நிதி சரியாக அயோத்திக்கு போகிறதா என்ற பெரும்பாலானோருக்கு எழுகிறது.
இந்த நிலையில் போலியான நன்கொடையில் மாட்டிக்கொள்ளாமல் வீட்டில் இருந்துகொண்டே நேரடியாக மக்கள் ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுக்க முடியும். இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் நன்கொடை கொடுக்கும் இடம் அரசு உருவாக்கியது என்பதால் வருமான வரி சலுகையும் கிடைக்கும்.

இந்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் பொறுப்புள்ள அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும். ராமர் கோயிலுக்குப் பணத்தை நன்கொடையாக வழங்க ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் இணையதளத்தை மக்கள் எளிதாகப் பயன்படுத்தலாம்.
"ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்குப் பணத்தை நன்கொடையாக வழங்க விரும்பும் ஒரு நபர், அயோத்தி ராமர் கோயிலை மறுகட்டமைப்பு/பராமரித்தல் போன்றவற்றை ஆன்லைனில் பல்வேறு வழிகளில் பணத்தை நன்கொடை செய்ய முடியும். இந்த இணையத் தளத்திற்குச் செல்ல https://srjbtkshetra.org/ இந்த லிங்கை பயன்படுத்தவும்.
மேலும் இணையதளத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, அனைத்து விபரங்களையும் தெரிந்துகொண்டு Donation options என்பதைக் கிளிக் செய்யலாம் அல்லது https://srjbtkshetra.org/donation-options/ என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.
இந்தத் தளத்தில் கட்டண வழிகளில் UPI/QR குறியீடு, NEFT, IMPS, Demand Draft, cheque அனுப்பத் தேவையான தகவல்கள் வங்கி வாரியாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் இணையதளத்தின்படி, அயோத்தி ராம் மந்திர் அறக்கட்டளைக்குப் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கு எந்தவிதமான கட்டணங்களும் அல்லது கட்டணங்களும் விதிக்கப்படவில்லை.
இதேபோல் பேமெண்ட் கேட்வே மூலம் நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த லிங்க்-ஐ பயன்படுத்தவும் https://online.srjbtkshetra.org/#/mobileVerification
இதேபோல் நீங்கள் செலுத்திய நன்கொடைக்கான ரசீதை இந்த தளத்தில் பெற்றுக்கொள்ளும் ஆஃப்ஷனும் உள்ளது. எனவே அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுக்க விருப்பம் இருப்பின் இதைப் பயன்படுத்தவும், போலியான நன்கொடை விளம்பரத்தில் ஏமாற வேண்டாம்.


Click it and Unblock the Notifications