உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள கோலாகல விழாவில் புதிய ராமர் கோயில் திறக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கோயிலைத் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் நேரலை நாட்டின் பல நகரங்களில், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிபரப்பப்படுகிறது.
பக்தர்கள் இந்த நிகழ்ச்சியை டிவியில் கண்டு ரசிக்கலாம். திறப்பு விழாவுக்குப் பின்னர் ஜனவரி 24 ஆம் தேதியிலிருந்து தரிசனத்துக்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில் ராமர் கோயில் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது.

ராமர் கோயில் வழக்கு: 2019 நவம்பர் 9 ஆம் தேதியன்று பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பை அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் வழங்கியது.
இதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி பிறந்தது. மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேசத்தில் 5 ஏக்கர் மாற்று இடம் தருவதற்கும் உத்தரவிடப்பட்டது.
அடிக்கல் நாட்டுவிழா: புதிய ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா பிரதமர் மோடி தலைமையில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது.
டிரஸ்ட் அமைப்பு: ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட் (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) கவனித்து வருகிறது. கட்டுமானப் பணிகளை உச்ச நீதிமன்றமும் கவனித்து வருகிறது. மேலும்
ராமர் கோயில் அளவு: ராமர் கோயில் பண்டைய நகர கட்டடக் கலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 380 அடி நீளமும், 250 அடி அகலமும், 161 அடி உயரம் என சுமார் 27 ஏக்கர் நிலத்தில் இந்த கோயில் அமைய உள்ளது. கோயில் மூன்று மாடி அடுக்குகளும் 398 தூண்களும் 44 கதவுகளும் கொண்டுள்ளது.
ராமர் கோயில் மண்டபங்கள்: இத்துடன் நிருத்ய மண்டபம், ரங்க மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம், கிர்தான் மண்டபம் என 5 மண்டபங்களும் உள்ளன.
நுழைவாயில் கிழக்குப்புறம் அமைந்துள்ளது. சிங்க துவாரம் வழியாக 32 படிக்கட்டுகளைக் கடந்து பக்தர்கள் உள்ளே வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ராமர் கோயிலில் முக்கிய சன்னதிகள்: கோயிலில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை. கோயில் வளாகத்தில் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர், சிவன் ஆகியோருக்கு தனியே கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அன்னை அன்னபூரணி கோயில் வடதிசையில் அமைந்துள்ளது. தென்புறத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.
ராமர் கோயில் தொழில்நுட்பம்: கோயில் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர் காம்பாக்டடு காங்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஈரப்பதத்தில் இருந்த பாதுகாக்க கிரானைட் கற்களால் 21 அடி உயர தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் செலவு: ராமர் கோயில் கட்டுமான செலவு
ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா 2022 இல் பிரமாண்ட ராமர் கோயிலை கட்டுவதற்கு 1,800 கோடி செலவிடப்படும் என்று மதிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications