இந்திய மக்களாலும், ராம பக்தர்களாலும் மிகவும் பரவசத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா அதிவிமரிசையாக நடைபெற்று முடிந்தது. பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்பானி, பிர்லா குடும்பங்கள் உள்பட ஏராளமான பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
உலகெங்கும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்களின் கவனத்தை ஈர்த்த ராமர் கோயிலுக்கு நன்கொடைகளும் குவிந்து வருகின்றன. இதுவரை ரூ.5.500 கோடி ரூபாய் நன்கொடை வசூலானதாகத் தெரிகிறது. பணம் மட்டும் அல்லாமல் தங்கம், வைரம் என வங்கியில் இருப்பது போல் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணமும், பொருட்களும் உள்ளது.

பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் வெளியில் சொல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகையை நன்கொடை அளித்ததாக கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை அளித்த தொழிலதிபர்கள் விவரம்:
முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.2.51 கோடி: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தாரும் ரூ.2.51 கோடியை நன்கொடையாக வழங்கினர்.
திலீப் குமார் வி லக்கி ரூ.68 கோடி: சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான திலீப் குமார் வி லக்கியும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து மிகப் பெரிய அளவில் 101 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தனர். இதன் மதிப்பு ரூ.68 கோடி ஆகும். இந்த 101 கிலோ தங்கத்தை வைத்து கோயிலின் கதவுகள், கர்ப்பக் கிரகம், திரிசூலம், கோயில் தூண்களில் இழைக்கப்படும்.
முகேஷ் படேல் ரூ.11 கோடி: சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் படேல் பாலராமர் சிலைக்கு வைர கிரீடத்தை நன்கொடையாக அளித்தார். இதன் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். முகேஷ் படேல் கிரீன் லாப் வைர கம்பெனியை வைத்துள்ளார். அவர் அளித்த கிரீடத்தில் 4.5 கிலோ எடையுள்ள வைரங்கள், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கோவிந்த்பாய் தோலாக்கியா ரூ.11 கோடி: குஜராத்தை சேர்ந்த கோவிந்த்பாய் தோலாக்கியா ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் ராமர் கோயிலுக்கு ரூ.11 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
மகேஷ் கபூதர்வாலா: ஸ்விஸ் கிளாஸ்கோட் எக்யூப்மெனஅட்ஸ் நிறுவனத்தின் மகேஷ் கபூதர்வாலா ரூ.5 கோடி நன்கொடை தந்துள்ளார்.
லவ்ஜி பாட்ஷா ரூ.1 கோடி: மாத்ருஸ்ரீ கன்குபா பவுண்டேஷனின் லவ்ஜி பாட்ஷஷா ரூ.1 கோடி அளித்துள்ளார்.
டபிள்யூ எஸ் ஹபீப் ரூ.1 லட்சம்: சென்னையை சேர்ந்த டபிள்யூ எஸ் ஹபீப் ராமர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்துள்ளார்.
ஆதித்யா மிட்டல் ரூ.25 லட்சம்: ஜலேசாரை சேர்ந்த ஆதித்யா மிட்டல் 2,400 கிலோ எடையுள்ள 8 உலோகங்களால் ஆன மணியை அளித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.25 லட்சம்
ராமர் கோயிலுக்கு நன்கொடை தந்த பிற நபர்கள்: மேலே உள்ள தொழிலதிபர்கள் தவிர பலர் நன்கொடையை குவித்து வந்துள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சமும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.2 லட்சமும் நன்கொடையாக அளித்துள்ளனர்.
இத்துடன் பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், அனுபம் கெர், முகேஷ் கண்ணா, பவன் கல்யாண், ஹேமா மாலினி, மனோஜ் ஜோஷி, குர்மீத் சௌத்ரி, பிரணிதா சுபாஷ் ஆகியோர் அயோத்தியின் ராமர் கோயிலுக்காக நன்கொடை அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications