அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டுக் கோடான கோடி மக்கள் ராமர் திருவுருவ சிலையை பார்த்து மகிழ்ந்த நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைவான கட்டணத்தில் அயோத்தி ராமரின் நேரடி தரிசனம் பெறும் வாய்ப்பை ஸ்பைஸ்ஜெட் கொடுத்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'அயோத்தியில் பிரான் பிரதிஷ்தா' நாளை கொண்டாடும் வகையில் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவை கட்டணங்கள் வெறும் 1622 ரூபாயில் (அனைத்தையும் சேர்த்து) அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்பைஸ்ஜெட் இணையதளத்தின்படி, இந்தச் சிறப்புச் சலுகையின் கீழ் இலவச தேதி மாற்றச் சலுகையுடன் உங்கள் பயணத் தேதியை மாற்றலாம். இதை விட முக்கியமாக ஸ்பைஸ்ஜெட் அயோத்தி-க்கு விமானச் சேவையை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
பிப்ரவரி 1, 2024 அன்று முதல் சென்னை, அகமதாபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர், பாட்னா மற்றும் தர்பங்கா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு ஸ்பைஸ்ஜெட் தனது விமானச் சேவையைத் துவங்குகிறது. இந்தச் சிறப்புச் சலுகையில் அயோத்திக்கு ரவுண்ட் டிரிப் சேவையைப் புதிய விமானங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அளிக்கிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அறிவிப்பின் படி இந்தச் சிறப்பு சலுகையின் கீழ் ஜனவரி 22-28 வரையிலான காலகட்டத்தில் டிக்கெட் புக் செய்துகொள்ள முடியும். மேலும் பயணக் காலம் பொருத்த வரையில் ஜனவரி 22 முதல் செப்டம்பர் 30, 2024 காலக்கட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் புக் செய்துகொள்ள முடியும்.
சென்னை மற்றும் மும்பையில் இருந்து அயோத்தி-க்கு தினசரி விமானங்களை இயங்குகிறது ஸ்பைஸ்ஜெட். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அயோத்தி ராமர் தரிசனத்தைப் பெற இனி ஜாலியாகப் பறந்து செல்ல முடியும்.
தற்போதைய விலை பட்டியல் படி சென்னையில் இருந்து அயோத்திக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி செய்ய 6422 ரூபாயாகும். ஏற்கனவே கூறியது போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானச் சேவை கட்டணம் 1162 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications