வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு - அரைநாள் விடுமுறை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஜனவரி 22 ஆம் தேதியன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள், மத்திய தொழில்சாலைகளும் ஜனவரி 22 ஆம் தேதியன்று மதியம் 2.30 மணிவரை மூடப்பட்டிருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், நிறுவனங்கள் அரைநாள் மூடப்பட உள்ளது.

வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு - அரைநாள் விடுமுறை..!!

ஜனவரி 22 ஆம் தேதியன்று கோயிலில் புதிய சிலையை நிறுவும் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் அரைநாள் விடுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அயோத்தியில் ராமர் சிலை பிரான் பிரதிஷ்டை விழாவை இந்தியா முழுவதும் 2024 ஜனவரி 22 அன்று கொண்டாடப்படும். இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் 22 ஜனவரி 2024 அன்று 1430 மணி நேரம் வரை அரை நாள் மூடப்படும் என பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளுக்கு இது பொருந்தும்.

மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்களிடையே பெரும் கோரிக்கை எழுந்தது.

மக்களின் அதீத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களை அரை நாள் மூடுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் அரைநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதியம் 2.30 மணிவரை அனைத்து வங்கிக் கிளைகளும் இயங்காது.

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது என்பதால் பொதுமக்கள் அதற்கேற்றபடி தங்களது அலுவல்களை அனுசரித்துக் கொள்ளும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதேபோல் உத்தரப் பிரதேச மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது. அங்கும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்காது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+