உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது, இந்த நிலையில் அங்கு புதிய சர்வதேச விமானநிலையம் அமைக்கப்பட்டு விரைவில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நிறைய பயணிகள் வருவார்கள் என்பதால் இண்டிகோ விமான நிறுவனம் ஜனவரி 15 முதல் தொழில் நகரமான மும்பையிலிருந்து புனித நகரமான அயோத்திக்கு தினசரி விமான சேவையைத் தொடங்குகிறது.

மும்பையில் இருந்து மதியம் 12.30 புறப்படும் விமானம் அயோத்தியை மதியம் 2.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் அயோத்தியில் இருந்து பிற்பகல் 3.15க்கு கிளம்பி மும்பையை மாலை 5.40க்கு வந்தடையும் என்று இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் டெல்லியில் இருந்து அயோத்திக்கு ஜனவரி 6 முதலும், ஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்தும் நேரடி விமான சேவையை இயக்கப் போவதாகக் கூறியிருந்த நிலையில் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய விமானத் தடங்கள் டிராவல், டூரிஸம், டிரேடை அயோத்தியில் வளர்ப்பதோடு பொருளாதர வளர்ச்சியையும் அதிகரிக்கும். இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அயோத்திக்கு நேரடி விமான சேவை மிகவும் பயனளிக்கும் என்று இண்டிகோ நிறுவன குளோபல் சேல்ஸ் தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் புதிய ராமர் கோயில் திறப்புவிழாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் கட்டுமானம் 2020 ஆம் ஆண்டில் தொடங்கியது. பாபர் மசூதி- ராமர் ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த 9 மாதங்களுக்குள் இந்தக் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோயில் திறப்புவிழாவுக்கு முக்கிய விருந்தினர்கள் பலர் வருவார்கள் எனக் கூறப்படுகிறது.
கோயில் திறப்பு விழாவுக்கு முன்பாக அயோத்தியில் அமைந்துள்ள மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ ராமர் சர்வதேச விமானநிலையத்தை டிசம்பர் 30 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications