உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் அங்கு செல்வதற்கு மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இதனிடையே பக்தர்களின் ஆர்வத்தை வைத்து பணம் பார்ப்பதற்காக பல மோசடி கும்பல்கள் கிளம்பிவிட்டதாகத் தெரிகிறது.
விஐபிகளுக்கு இலவச பாஸ்: ஏராளமான பக்தர்களுக்கு இலவசமாக விஐபி தரிசன டிக்கெட் தருவதாகக் கூறி வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் போலியான தகவல்கள் வந்து சேர்கின்றன. இது பற்றி விஸ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வாட்ஸ்அப்பில் ஒரு ஏபிகே பைல் இணைப்புடன் ராம் ஜென்மபூமி கிரிஷம்பர்க் அபியான்.ஏபிகே என்ற மெசேஜ் வருகிறது.

விஐபி தரிசனம் செய்ய இந்த மெசேஜை இன்ஸ்டால் செய்யும்படி யூஸர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒரு விண்ணப்பத்தை சேர்த்து அதில் யூஸர்களின் விவரங்களைக் கேட்கின்றனர்.
எந்தவொரு அரசோ, கோயில் அறக்கட்டளை உறுப்பினரோ, அதிகாரிகளோ இதில் சம்பந்தப்படவில்லை.
இந்த ஏபிகே பைல்களை இன்ஸ்டால் செய்தால் யூஸர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு மோசடி நடவடிக்கைகள் ஏற்படும். இதனை வைத்து உங்களது மொபைல் போனை அவர்கள் இயக்குவார்கள். உங்களது லொகேஷனைத் தெரிந்து கொள்வார்ககள்.
எனவே பக்தர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதிகாரப்பூர்வமான அழைப்புகள் உள்ளவர்கள் மட்டுமே ஜனவரி 22 ஆம் தேதியன்று ராமர் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஹோட்டல் புக்கிங்: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஹோட்டல் முன்பதிவுகளை முடிந்தவரை ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். கோயில் அறக்கட்டளை பரிந்துரைப்பவர்களுக்கு முன்னுரிமை தரவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்த்தி சேவை: கோயில் திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் ஆரத்தி எடுக்கலாம். இலவச நுழைவு பாஸ் கோயிலில் நேரடியாகப் பெறலாம் அல்லது ஆன்லைனில் பெறலாம். ஆரத்தி பாஸ் பிரிவு மேலாளர் துருவேஷ் மிஷ்ரா இதுபற்றி கூறுகையில், பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆரத்தியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அரசு வழங்கிய ஐடி கார்டுகளை வைத்து ஆரத்திக்கான பாஸ்களை வாங்கலாம். ஒரு பாஸுக்கு 30 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் கூடுதல் நபர்களை சேர்க்கலாம். இந்த சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது என்றார்.
நன்கொடை மோசடி: எக்ஸில் பகிரப்பட்ட மற்றொரு பதிவில் ஸ்ரீ ராமர் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரம் அயோத்தி, உத்தரப் பிரதேசம் என்ற பெயரில் உள்ள சோசியல் மீடியா பக்கத்தில் க்யூ ஆர் கோடு உள்ளது. இதில் பக்தர்களை ராமர் கோயில் கட்டுமானச் செலவுக்காக நன்கொடை தருமாறு வலியுறுத்தப்படுகிறது. இதுவும் போலியே என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
சிலர் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற பெயரில் போலி அடையாள அட்டைகளை உருவாக்கி மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இந்த விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் அதிகாரி பன்சால் கூறினார்.
இலவச பிரசாதம்: ராம் மந்திரில் இருந்து இலவச பிரசாதம் முன்பதிவு செய்தவுடன், "பிரான் பிரதிஷ்டை" நிகழ்வுக்குப் பிறகு, ராமர் மந்திர் பிரசாதத்தை உங்களுக்கு இலவசமாக அனுப்புவதாகக் கூறும் இணையதளம் உள்ளது. "காதி ஆர்கானிக்" என்ற இணையதளம், "ஒரு தனித்துவமான முயற்சியைக் கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் பக்தர்கள் வீட்டிலேயே ராமர் கோவிலின் பிரசாதத்தைப் பெறலாம்" என்று கூறுகிறது.
காதி ஆர்கானிக் இணையதளம், ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அல்லது எந்த அரசு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சமூக ஊடகங்களில் பலர் இது மோசடி என்று கூறுகின்றனர், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications