உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயில் ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் பண்டைய நம்பிக்கைகளுடன் நவீன அறிவியல் ஒண்றிணைந்து அமைந்துள்ளது.
பிரமாண்டமான இந்த ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் மோசமான நிலநடுக்கங்கள், பெருவெள்ளங்களால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தாங்கக்கூடிய வல்லமையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
டாடா கன்சல்டிங் இஞ்சினியரஸ் லிமிடெட்டும் லார்சன் அண்டு டூப்ரோவும் இணைந்து சிறப்பாகத் திட்டமிட்டு நவீன கட்டடத் தொழில்நுட்பத்தால் கோயில் கட்டப்பட்டுள்ளது.

360 தூண்கள்: கோயில் வடிவமைப்பு நகரா ஸ்டைல் (Nagara style) கட்டடக்கலையைச் சார்ந்துள்ளது. இதில் முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன 360 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருங்கல்: நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை. நிலநடுக்கத்தைத் தாக்குப்பிடிப்பதற்காக இந்த வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மற்ற பொருட்களை விட கருங்கல்லின் ஆயுட்காலம் அதிகமாகும்.
21 அடி கிரானைட் அடித்தளம்: கோயிலின் சிறப்பம்சம் என்றால் அதன் அடித்தளம். 15 மீட்டர் தடிமனான காம்பாக்டடு கான்கிரீட் கொண்டு ஒரு படிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 56 அடுக்கு காம்பாக்டடு கான்கிரீட் உடன் ஃப்ளை ஆஷ், தூசு, கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான அடித்தளம் 21 அடி கிரானைட் கல்லால் ஆனது. இதனால் ஈரப்பதம் கோயிலை பாதிக்காது.
18 டிகிரி வெப்பநிலை: இந்த 21 அடி கிரானைட் அடித்தளம் 18 டிகிரி செல்சியஸ்ஸுக்குக் கீழே வெப்பநிலை இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. இதற்காக கட்டுமானப் பகுதியிலேயே ஐஸ்கட்டி உடைக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு வெளிப்புற வெப்பநிலை பாதிக்காதவாறு அடித்தளம் உயர் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் பணியில் 150 இஞ்சினியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நிலநடுக்கம்: கோயில் வடிவமைப்பு ரிக்டர் அளவில் 6.5 நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது. அடுத்த 1000 ஆண்டுகளுக்கு எந்த சீரமைப்பு பணியும் தேவைப்படாது. இதற்காக நேபாளம் முதல் அயோத்தி வரை நிலநடுக்க பாதிப்புகளை உன்னிப்பாக கட்டுமானக் குழு நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். அதைவைத்து உறுதியான அடித்தளம் அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டது.
சென்னை ஐஐடி: சென்னை இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியின் அறிவுரைப்படி இஞ்சினியர்கள் 15 மீட்டர் ஆழத்துக்கு தோண்டி அடியில் இருந்த மண்ணை அகற்றினர். அதில் ரீஇஞ்சினியர்டு மண்ணை வைத்து நிரப்பினர். இந்த ரீஇஞ்சினியர்டு மண் அடித்தளத்தில் 14 நாட்களில் கல்லாக மாறிவிடும். இப்படி 47 அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
CISR அமைப்பு: ரூர்க்கி, சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட் டைரக்டர் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கல்லின் தரத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது மற்ற பொருட்கள் போல துருப்பிடிக்காத தன்மை கொண்டதாகக் கூறினார்.
கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பு எந்தவித வெள்ளப்பெருக்காலும் பாதிக்காத நிலமட்டத்தில் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ராமநவமி தினத்தன்று கோயில் விக்ரகங்களின் நெற்றியில் சூரிய ஒளி வந்து படும்வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் ஆன்மிகத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒன்று சேர அமைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications